வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா, மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் படத்தின் நாயகன் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு GOAT படத்தில் இடம்பெறும் “சின்ன சின்ன கண்கள்” என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர்.
கபிலன் வைரமுத்து எழுதி உள்ள இந்த பாடலை விஜய்யும், மறைந்த பின்னணி பாடகி பவதாரிணியின் குரலை ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விஜய், சினேகா இடையேயான காதல் பாடலாக இது படத்தில் இடம் பெற்றுள்ளது என தெரிகிறது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல், யூடியூபில் 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த நிலையில் பாடல் உருவான விதம் குறித்து யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு அனைவரையும் உருக செய்துள்ளது.
அதில், “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்“படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம்.
அவர் மருத்துவ மனையில் இருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது.அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
எனது இசைக்குழுவினருக்கும், இதனை சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்” என யுவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் பிரேம்ஜி, நடிகை சுனைனா உள்ளிட்ட திரைபிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கள்ளக்குறிச்சி : பலி எண்ணிக்கை 57ஆக உயர்வு!
வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா… ஹர்திக்கை புகழ்ந்த ரோகித்!
can i purchase cheap clomid prices [url=http://clomid.store/#]clomid prices[/url] clomid generics
AmoxilPharm: Amoxil Pharm Store – AmoxilPharm
semaglutide [url=https://semaglutidepharm.com/#]rybelsus cost[/url] cheap Rybelsus 14 mg
paxlovid india: Paxlovid.ink – Paxlovid.ink