இரட்டைக் குழந்தை: சின்மயி வைத்த முற்றுப்புள்ளி!

சினிமா

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக சினிமா, சமூகம் சார்ந்த விஷயங்களில் எதிர்வினை பற்றிய பயம் இன்றி கருத்துக்களை சமூகவலைதளங்கள் மூலமாக வெளியிட்டு பரபரப்புக்குரியவராக இருந்து வந்தார் பின்னணி பாடகி சின்மயி.

சக பெண் திரைக் கலைஞர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது தனது குரலை தவறாமல் அழுத்தமாகப் பதிவு செய்து வந்தார்.

இந்த சமயத்தில்தான் கடந்த ஜூன் மாதம் திடீரென தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தார் சின்மயி.

அதுவரை தான் கர்ப்பமான புகைப்படங்களையோ அல்லது வளைகாப்பு போன்ற விசேஷ நிகழ்வுகள் நடைபெற்ற புகைப்படங்கள் எதையும் அவர் பிற திரைக் கலைஞர்கள் போன்று பொதுவெளியில் பகிர்ந்துகொள்ளாததால்…

ஒருவேளை வாடகைத்தாய் மூலமாக சின்மயி குழந்தை பெற்றிருக்கலாம் என்றே பலரும் அப்போது சந்தேகக் கேள்விகளை எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினர் இரட்டைக் குழந்தைகள் பெற்ற விவகாரம் வெளியானது. அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, தான் வாடகைத் தாய் மூலமாக குழந்தை பெறவில்லை என இதுவரை நிலவிய சந்தேகத்திற்கு. முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இராமானுஜம்

நடிகை பார்வதியுடன் இணைந்த லீனா மணிமேகலை

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் ஜோதிகா- மம்முட்டி ஜோடி!

+1
1
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *