நடிகர் கிருஷ்ணா மறைவு: மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர்!

சினிமா

தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகரும், மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவின் மரணம் தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணா இன்று (நவம்பர் 15) அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார்.

தெலுங்கு திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம்வந்த கிருஷ்ணா இதுவரை 325 படங்களில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தளங்களிலும் அவர் வெற்றிகரமாகவே இயங்கி வந்தார்.

கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான இந்திரா தேவி இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறந்தார். இவரது மூத்த மகன் ரமேஷ் பாபு ஜனவரி மாதம் இறந்தார். இவரது இரண்டாவது மனைவியான நடிகை விஜய நிர்மலா 2019ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கிருஷ்ணாவின் மறைவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியத் திரையுலகிற்கு இழப்பு!

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ”பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது.

தெலுங்கு சினிமாவில் பல புதுமைகளுக்கு முன்னோடியாக இருந்தவர். நடிகர் கிருஷ்ணாவின் மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

கிருஷ்ணாவை இழந்து வாடும் மகேஷ்பாபு மற்றும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

வீராங்கனை மரணம் : மருத்துவர்கள் மீது நடவடிக்கை என்ன? – அமைச்சர் விளக்கம்

”கட்டாய மதமாற்றம் நாட்டுக்கு அச்சுறுத்தல்!” – உச்சநீதிமன்றம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *