மூடப்படும் திரையரங்கம்… நினைவுகளை பகிர்ந்து பிரபலங்கள், ரசிகர்கள் வருத்தம்!
சென்னையின் பிரபல திரையரங்கம் மூடப்படவுள்ள நிலையில், ரசிகர்கள் அதுகுறித்த தங்களது நினைவுகளை பகிர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையின் மையப்பகுதியான அசோக் நகரில் உள்ளது உதயம் திரையரங்கம். 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திரையரங்கில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என நான்கு திரைகள் இயங்கி வந்தன.
சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வந்த இந்த திரையரங்கம் தற்போது ஒரேயடியாக மூடப்படவிருக்கிறது. மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், ஓடிடி போன்ற காரணங்களால் சில வருடங்களாக திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.
இதையடுத்து தியேட்டர் இருந்த இடத்தை உரிமையாளர்கள் விற்பனை செய்து விட்டதாகவும், இடத்தினை வாங்கிய பிரபல கட்டுமான நிறுவனம் அந்த இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படவிருக்கிறதாம்.
இந்த நிலையில் உதயம் திரையரங்கம் மூடப்படும் தகவல் தங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் நினைவலைகளைப் பகிர்ந்து, வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் உதயம் திரையரங்கம் குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;
இதயம் கிறீச்சிடுகிறதுமுதல் மரியாதை, சிந்து பைரவி,
பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்
ரோஜா என்று
நான் பாட்டெழுதிய
பல வெற்றிப் படங்களை
வெளியிட்ட உதயம் திரைவளாகம்
மூடப்படுவது கண்டு
என் கண்கள்
கலைக் கண்ணீர் வடிக்கின்றனமாற்றங்களின்
ஆக்டோபஸ் கரங்களுக்கு… pic.twitter.com/ckGwDDD6bC— வைரமுத்து (@Vairamuthu) February 15, 2024
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கடகடவென சரியும் தங்கம் விலை… ஒரு பவுன் எவ்வளவுன்னு பாருங்க!
தேர்தல் பத்திரம் திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: உச்சநீதிமன்றம்!