சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் நவம்பர் 1ஆம் தேதி லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நடத்த காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று (அக்டோபர் 30) அனுமதி அளித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது லியோ திரைப்படம்.
த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம் முதல் வாரத்தில் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாக படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து லியோ படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 01 ஆம் தேதி கொண்டாட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை காவல்துறையிடம் அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரப்பட்டது.
விழா தொடர்பாக விளக்கம் கேட்டு படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை நேற்று கடிதம் அனுப்பியது.
இதற்கு தயாரிப்பு நிறுவனமும் பதில் அளித்த நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழாவை நாளை மறுநாள் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி நிபந்தனைகளாக,
200 முதல் 300 கார்களுக்கு மட்டுமே அனுமதி.
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேருந்தில் வருவதற்கு அனுமதி இல்லை.
அனுமதி கேட்ட நேரத்தில் சரியாக நிகழ்ச்சியை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவியது.
இந்த நிலையில், படத்தின் வெற்றி விழாவிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கார்த்தி 25: திரைபிரபலங்களின் முழுப்பேச்சு தொகுப்பு!
ஆந்திரா ரயில் விபத்து: பலி எண்ணிக்கை அதிகரிப்பு!