சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா இன்று (டிசம்பர் 15) முதல் துவங்குகிறது.
2003-ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 20-வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
திரைப்பட விழாவில் 51 நாடுகளிலிருந்து 102 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
![chennai international film festival 2022 start today](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/igailunclupd3tgyg217.webp)
தமிழில் 12 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆதார், கார்கி, பபூன், , இரவின் நிழல், கசட தபற, மாமனிதன், நட்சத்திரம் நகர்கிறது, ஓ2, யுத்த காண்டம், கடைசி விவசாயி, கோட், பிகினிங் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
![chennai international film festival 2022 start today](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/90914934.webp)
இதிலிருந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒலிப்பதிவாளர், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த படம், சிறந்த இரண்டாவது படம், அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது உள்ளிட்ட 9 விருதுகள் வழங்கப்பட உள்ளது.
சர்வதேச திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் இன்று துவங்கி வைக்கிறார்.
சென்னை சத்யம் சினிமாஸ் வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள் மற்றும் அண்ணா திரையரங்கத்தில் ஒரு நாளுக்கு 4 காட்சிகள் வீதம் 20 திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவை முன்னிட்டு சினிமா ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
செல்வம்
போராடிய மொராக்கோ: அசத்திய பிரான்ஸ்
உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தும் ரஷ்யா: முக்கிய நிர்வாகக் கட்டடங்கள் சேதம்!