udhayanidhi and red giant movies

மாமன்னன் படத்திற்கு தடை கோரி மனு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

சினிமா

மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவிஸ் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 23) உத்தரவிட்டுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் தொடங்கி டிரெய்லர் வரை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்தது மாமன்னன்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடுத்தடுத்து வெளியான பாடல்களும் அந்த எதிர்பார்ப்பை குறைக்காமல் பார்த்துக் கொண்டது.

இந்நிலையில் மாமன்னன் படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஓ.எஸ்.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ”இயக்குநர் கே.எஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிப்பில்,

ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு படப்பிடிப்பு துவங்கியது.

கிட்டத்தட்ட 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும்.

ஒப்பந்தப்படி உதயநிதி ஸ்டாலின் இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டும்.

ஆனால் உதயநிதி ஸ்டாலின் கால்ஷீட் தராமல் புறக்கணித்து வருவதால் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்று ஜூன் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

மோனிஷா

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம்!

“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்துவோம்” – ராகுல் காந்தி

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *