‘பொன்னியின் செல்வன் பாகம்-2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 28) உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் ரூ.500 கோடி வசூலித்து பெரும் வெற்றியை பெற்றது.
அதனைத்தொடந்து நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைக்கோரி படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எஸ். சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ‘பொன்னியின் செல்வன் பாகம்-2’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது சரியா?: அண்ணாமலை பதில்
நிர்மலா சீதாராமன் – ஸ்டாலின் சந்திப்பு!