banned websites to release leo movie

லியோ திரைப்படம்: இணையத்தில் வெளியிட தடை!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை சட்ட விரோதமாக இணையத்தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இன்று (அக்டோபர் 18) உத்தரவிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் நாளை (அக்டோபர் 19) வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தை இணையத்தளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (அக்டோபர் 18) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாரிப்பு நிறுவனம் சார்பில், “லியோ திரைப்படம் 1200-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

லியோ திரைப்படம் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் திருட்டுத்தனமாக இணையத்தளத்தில் வெளியிட்டால் நஷ்டம் ஏற்படும். மேலும் திரைக்கலைஞர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படும்” என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து லியோ திரைப்படத்தை 1246 இணையத்தளங்களில் சட்டவிரோதமாக வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

லியோ புக்கிங்கை தொடங்காத சென்னை தியேட்டர்கள்… ’ரோகிணி’ அதிர்ச்சி முடிவு!

தமன்னாவின் முதல் மலையாள படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts