நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையத்தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இமானுவேல் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜப்பான் படத்தின் போஸ்டர், இசை, ட்ரெய்லர் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக நாளை (நவம்பர் 10) ஜப்பான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஜப்பான் படத்தை சட்டவிரோதமாக இணையத்தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமாக ஜப்பான் திரைப்படத்தை வெளியிட 1,177 இணையத்தளங்கள் மற்றும் கேபிள் டிவி நிறுவனங்களுக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
டூவீலருக்கு அபராதம் 2000 ரூபாய்… ஆனால், ஆம்னி பஸ்சுக்கு ரூ. 1768தான்- தீபாவளிக்கும் தொடரும் கொள்ளை!
நீலகிரியில் கொட்டும் மழை : மண் சரிவு, உருண்டு விழுந்த பாறைகள்!