திடீரென்று மருத்துவமனையில் சாருஹாசன்… 93 வயது மனிதருக்கு அறுவைசிகிச்சை?

சினிமா

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன்,  தமிழ், தெலுங்கு,  மலையாளம் மற்றும் இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். வழக்கறிஞராகவும்  எழுத்தாளராகவும் இயக்குநராகவும்  அறியப்பட்டவர். 1979ம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் முதல்  சமீபத்தில் மோகன் நடிப்பில் வெளியான ஹரா வரை  பல படங்களில் இவர் நடித்துள்ளார்.  தளபதி படத்தில் நடிகை ஷோபனாவின் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார். 93 வயதான இவர், இப்போது வரை நடிக்கத்தான் செய்கிறார்.  சில படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து சாருஹாசனின் மகள் நடிகை சுஹாசினி வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆபரேசனுக்கு ரெடியா என்று  தந்தையிடம் சுஹாசினி கேட்க, ரெடி என சாருஹாசன் படுக்கையில் இருந்தபடியே சொல்கிறார்.

மேலும், சுஹாசினி அந்த பதிவில், ‘தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், அவதிப்பட்ட நிலையில், அவரை  மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் இருக்கிறார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகி விடுவார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்’ என்று  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் சாருஹாசன் விரைவில் குணமடைய வாழ்த்தியுள்ளனர். வயோதிகம் காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

டெல்லியில் தலயை பார்த்தாச்சு… சென்னையில் மஞ்சள் சட்டை ரெடியாச்சு!

“மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1”: ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *