திருமணத்திற்குப் பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் இது ஒன்றுதான் என நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஹன்சிகாவுக்கும் அவருடைய நீண்ட கால நண்பரான சோஹைல் கதுரியாவுக்கும் 2022 டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த பிறகு இன்று (ஜனவரி 30) முதன்முறையாக ஹன்சிகா சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ரொம்ப சந்தோஷம். ஒரு குழந்தை மீண்டும் தனது தாய்வீட்டுக்கு வருவது போல் உணர்கிறேன். தற்போது நந்த கோபால் படத்தில் நடிக்கிறேன். இந்த ஆண்டு மட்டும் 7 படங்கள் கையில் இருக்கிறது.
திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கை நன்றாக உள்ளது. சந்தோஷமாக இருக்கிறேன்” என்றார்.
அப்போது திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில் நடிகைகளுக்குச் சிக்கல்கள் ஏற்படுமா என்பது தொடர்பான கேள்விக்கு, “அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. இன்றைய தலைமுறையினர் அனைவரையும் சமமாக பார்க்கிறார்கள்.
நான் மீண்டும் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளேன். நீங்கள் எல்லாம் என்னை உற்சாகமாக வரவேற்கிறீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்.
எனது வாழ்க்கையில் திருமணத்திற்குப் பிறகு ஒரு மாற்றம்தான் ஏற்பட்டுள்ளது. அது நான் அணிந்திருக்கும் மோதிரம் தான். மற்றபடி எதுவும் இல்லை” என குறிப்பிட்டார்.
பிரியா
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பணத்திற்காக கோவிட் வைரஸ் உருவாக்கம்: சர்ச்சையில் ஃபைசர்