‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ : சித்தார்த்தை துன்புறுத்திய சிஆர்பிஎப்!

சினிமா

மதுரை விமானநிலைய ‘சிஆர்பிஎப்’ அதிகாரிகள், ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்தவர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த பாய்ஸ், ஆயுத எழுத்து என அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி பிரபலமடைந்தார்.

தமிழில் அடுத்த ரிலீஸாக ‘இந்தியன் 2’ படத்துக்காகக் காத்திருக்கிறார். இவர் சினிமா மட்டுமின்றி அரசியல் கருத்துக்களையும் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், மதுரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ள அவர், இது குறித்து நேற்று (டிசம்பர் 27 ) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் ,

‘CRPF’ அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானேன். அவர்கள் வயதான என் பெற்றோர்களிடம் பையிலிருக்கும் நாணயங்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

Central Reserve Police Force

அவர்கள் எங்களிடம் இந்தியில் தொடர்ந்து பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். இருப்பினும் தொடர்ந்து மீண்டும் மீண்டும் இந்தியில் மட்டுமே பேசினார்கள் . அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது ‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ என்றார்கள்.

வேலையில்லாதவர்கள் எல்லாம் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பற்றிய விவாதங்கள் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தத்துவத்தில் இறங்கிய தனுஷ் சகோதரர்!

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா!

+1
0
+1
1
+1
0
+1
12
+1
1
+1
0
+1
0

3 thoughts on “‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ : சித்தார்த்தை துன்புறுத்திய சிஆர்பிஎப்!

  1. Airport duty பாக்குறது cisf ஏண்டா crpfனு சொல்ற உன் உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா… பல தடவை ஏர்போர்ட்ல போய் இருக்கேன் சிஐஎஃப் தான் டூட்டி, பத்திரிக்கை நடத்துறேன்னு பேருல தப்பான விஷயத்தை பிறப்பாத

  2. They shouldn’t have behaved like this,if they don’t know the regional language they shouldn’t have posted especially in Madurai.TN govt should lookinto this matter.Will they behave with Tamil Nadu ministers.Simply they will …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *