’ஏ’ சர்டிபிகேட்டில் இவ்வளவு சிக்கல்களா? விக்ரம் கோப்ராவுக்கு குடைச்சல்!

சினிமா

இயக்குநர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் கோப்ரா.

விக்ரம், ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக  உருவாகியிருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையைஉதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்பெற்றிருக்கிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கோப்ரா படத்தை தணிக்கைக்குழு பார்த்து  “A”சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். இதனால், படத்தை விலை கொடுத்து வாங்கியவர்கள் பதறிப் போனார்கள்.

ஏனெனில் “A”சான்றிதழ் படங்களைத் திரையிடுவது முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வரை எல்லாவற்றிற்கும் ஏற்கெனவே பேசப்பட்ட விலையைக் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மீண்டும் ஒரு தணிக்கை,”U” சான்றிதழ் பெற வேண்டும் அதற்கான சில காட்சிகளை படத்தில் இருந்து தூக்க வேண்டியிருக்கும். 

திரையரங்குகளில் வயது வந்தோருக்கு மட்டுமே டிக்கட் விற்பனை செய்ய முடியும்.  குடும்பங்கள், குழந்தைகளுடன் வரக்கூடிய வாய்ப்பு மறுக்கப்படும்.  இதனால் வசூல் பாதிக்கப்படும்.

இந்த காரணங்களால் விலையைக் குறைக்கச் சொல்ல தொடங்கியுள்ளனர்.  இதனால் கோடிக்கணக்கான வருவாய் இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

எனவே கோப்ரா படத்தை விலைக்கு வாங்கியவர்களிடம், “நாங்கள் மேல்முறையீடு செய்து “U” அல்லது” UA” சான்றிதழ் பெற்றுவிடுவோம். அதுவரை பொறுத்திருங்கள்”  என்று சொல்லியிருக்கிறதாம் படக்குழு.

இராமானுஜம்

விக்ரமின் கோப்ரா வெளியாவதில் தாமதம்: ஏன்?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *