நட்சத்திர கிரிக்கெட்: பங்கேற்பது யார் யார்?

சினிமா

எட்டு மாநில திரைப்பட துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL)பிப்ரவரி 18முதல் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஹையாத் நட்சத்திர விடுதியில் இன்று (பிப்ரவரி 15) காலை நடைபெற்றது.

அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,

“இந்தியாவின்  செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் நடைபெற உள்ளது. இந்தியாவில் பொழுதுபோக்கு என்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். அதிசயமாக இந்த இரண்டு விசயங்களும் ஒன்றாக செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்  நிகழ்வில் இணைகிறது.

இந்தியாவின் 8 மாநிலத்தைச் சேர்ந்த அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறது,
ராய்ப்பூர், பெங்களூர், ஹைதராபாத், ஜோத்பூர், திருவனந்தபுரம் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் 19 ஆட்டங்களாக இந்த போட்டி நடைபெற உள்ளது.

Celebrity Cricket League CCL

மும்பை ஹீரோஸ் அணி பிராண்ட் அம்பாசிடராக சல்மான்கான் மற்றும் கேப்டனாக ரித்தேஷ் தேஷ்முக், 

சென்னை ரைனோஸ் அணி கேப்டனாக ஜீவா ஐகான் பிளேயராகவும், விஷ்ணு விஷால் நட்சத்திர வீரராகவும், 

தெலுங்கு வாரியர்ஸ் அணிக்கு வெங்கடேஷ் இணை உரிமையாளராகவும், அகில் கேப்டனாகவும் இப்போட்டிகளில் பங்கேற்கின்றனர். 

மேலும் போஜ்புரி தபாங்ஸ் கேப்டனாக மனோஜ் திவாரி, கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியின் இணை உரிமையாளராக மோகன்லால், கேப்டனாக குஞ்சாக்கோ போபன்  பெங்கால் டைகர்ஸ் அணிக்கு  கேப்டனாக ஜிசுசென் குப்தா,

கர்நாடகா புல்டோசர்ஸ் கேப்டனாக சுதீப்,  பஞ்சாப்  தி ஷேர் அணிக்கு கேப்டனாக சோனுசூட் பங்கேற்கின்றனர்.

120க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

Celebrity Cricket League CCL

பெங்களூர், ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற ஸ்டேடியங்கள் முந்தைய சீசன்களில் நிரம்பி வழிந்தன. இந்த முறை மற்ற இடங்களிலும் கூட்டமாக ரசிகர்கள் வருவார்களென எதிர்பார்க்கப்படுகிறது. 

இராமானுஜம்

“எடப்பாடியின் பிரச்சாரத்தைத் தடுக்க ரூ.1000” : திமுக மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு!

காவிரி ஆற்றில் மூழ்கி 4 சிறுமிகள் பலி: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

+1
0
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.