actor vijay political entry

”வா தலைவா” விஜயை வாழ்த்தும் திரை பிரபலங்கள்!

சினிமா

தளபதி விஜயின் அரசியல் என்ட்ரிக்கு, திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

‘தளபதி விஜய்’ என ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களாலும் அழைக்கப்படும் நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதோடு கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைத்திருப்பதாக இன்று(பிப்ரவரி 2) அறிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் #தமிழகவெற்றிகழகம் என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத், ”வாழ்த்துகள் அண்ணா” என தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் சாந்தனு, ”நீங்கள் பெரிய உயரங்களை அடைய வேண்டும். தமிழ்நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதை சிறப்பாக செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன்”, என வாழ்த்தி இருக்கிறார்.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ”வாழ்த்துகள் அண்ணா” என பாராட்டி இருக்கிறார்.

நடிகர் சிபி சத்யராஜ் ”அண்ணா சொன்ன சொல்லை காப்பாற்றி அரசியலுக்கு வந்ததற்காக, தளபதிக்கு முழு மனதுடன் தலை வணங்குகிறேன். பெரிய திரையில் அவரது படங்களை பார்க்க தவறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரை போன்ற தலைவர்கள் உலகிற்கு தேவை என்பதால் அவரது முடிவை நான் ஆதரிக்கிறேன்,” என தெரிவித்து இருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ”வரவேற்புகள் அண்ணா” என விஜயை வாழ்த்தி இருக்கிறார்.

இயக்குநர் அட்லி, ”வாழ்த்துகள் அண்ணா” என விஜயை வாழ்த்தி இருக்கிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார், ”வாவ்” என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

தெலுங்கு நடிகர் கோபிசந்த், ”வாழ்த்துகள் சார்”, என விஜயை வாழ்த்தி உள்ளார்.

இதேபோல மேலும் பல திரை பிரபலங்களும், விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்ற சம்பாய் சோரனுக்கு 3 நாள் கெடு!

மணல் குவாரிகளில் ரெய்டு : ரூ.130 கோடி சொத்துகளை முடக்கிய ED!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *