‘மாமன்னன்’ திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று (ஜூலை 1) கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். இதற்கிடையே இந்த படத்திற்கு ஒரு சில சாதி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘மாமன்னன்’ திரைப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ‘மாமன்னன்’ திரைப்படம் முதல் நாளில் சுமார் எட்டு கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகவும், வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் இன்று (ஜூலை 1) கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
இது தொடர்பாக அப்படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாமன்னன் திரைப்படத்தை தன் உயிரோட்டமான இசையால் வெற்றிப்படைப்பாக்கிய இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கு, படக்குழுவின் சார்பில் அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு : நீதிமன்றத்தில் மனு!
கலைஞர் நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத்தொகை: சிறப்பு அதிகாரிகள்!