அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 25) ஆஜரானார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை யாஷிகா ஆனந்த். நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்

2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடிகை யாஷிகா ஆனந்த் தனது நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று விட்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவரது கார் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு பகுதியில் வந்துகொண்டிருந்தபோது சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளி பவானி ஷெட்டி உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மார்ச் 24-ஆம் தேதி யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகும்படி நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா உத்தரவிட்டார். அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மார்ச் 26-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானதால் அவரது பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாய்தாவிற்காக யாஷிகா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். ஜூலை 27-ஆம் தேதி வழக்கின் விசாரணைக்காக மீண்டும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
செல்வம்
பொன்னியின் செல்வன் 2 வெளியீடு : புலம்பும் தியேட்டர் உரிமையாளர்கள்!
தூய்மை பணியாளர்கள் நியமனம்: டெண்டர் குழுவிற்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை!