மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு தளபதி விஜய் தன்னுடைய ‘GOAT’ படத்தின் வழியாக, நன்றிக்கடன் செலுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் தன்னுடைய 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுகிறார். இதனால் அவரின் ‘GOAT’ மற்றும் 69-வது படங்களுக்கு கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, தன்னுடைய ‘GOAT’ படத்தில் ஏஐ டெக்னாலஜி வழியாக விஜயகாந்தின் சிறப்புத்தோற்றம் இடம்பெற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம்.
இதையடுத்து கேப்டனின் மனைவி பிரமேலதா விஜயகாந்திடமும் பேசி, இதற்கான ஒப்புதலை படக்குழுவினர் வாங்கி இருக்கிறார்களாம்.
விஜய் படத்தில் கேப்டனின் சிறப்புத்தோற்றம் இடம்பெறுவதற்கு, கேப்டனின் குடும்பத்தினர் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
என்றாலும் விஜயகாந்த் தொடர்பான காட்சிகளை தங்களுக்கு ஒருமுறை போட்டு காட்டிய பிறகே, திரைக்கு கொண்டுவர வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் படக்குழுவினருக்கு கோரிக்கை விடுத்துள்ளாராம்.
தற்போது அரசியல் என்ட்ரி கொடுத்திருக்கும் இந்த நேரத்தில், விஜயகாந்திற்கு செலுத்தும் நன்றிக்கடனாக விஜய் இதை பார்க்கிறாராம்.
அந்த வகையில் இந்த படத்தில் விஜயின் அப்பாவாக, கேப்டன் சில காட்சிகளில் தோன்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜயின் ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜயகாந்த் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். அப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகத்தில் மழை : மக்களை குளிர்வித்த வானிலை மையம்!
Tennis : முதன்முறையாக டாப்-100ல் நுழைந்து இந்திய வீரர் சாதனை!