vijayakanth featured goat movie

விஜயின் ‘GOAT’ படத்தில் இணைந்த விஜயகாந்த்… புகைப்படம் உள்ளே!

சினிமா

அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘GOAT’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என முன்னணி நடிக, நடிகையர் பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஜய் இதில் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாகவும், அவருக்கு வில்லனாக பிரசாந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் சிறப்புத்தோற்றம் தன்னுடைய ‘GOAT’ படத்தில் இடம்பெற வேண்டும் என விஜய் விரும்பினார்.

இதையடுத்து கேப்டனின் மனைவி பிரமேலதா விஜயகாந்திடம் பேசி, இதற்கான ஒப்புதலை படக்குழுவினர் வாங்கினர்.

அனுமதி அளித்தாலும் விஜயகாந்த் காட்சிகளை தங்களுக்கு ஒருமுறை போட்டுக் காட்டிய பிறகே, திரைக்கு கொண்டுவர வேண்டும் என பிரேமலதா படக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

‘ஏஐ’ டெக்னாலஜி வழியாக விஜயகாந்த் இந்த படத்தில் விஜயின் அப்பாவாக சில காட்சிகளில் தோன்றவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது கேப்டன் விஜயகாந்த் ‘GOAT’ படத்தின் போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் இடம் பெற்றுள்ளார்.

முன்னதாக விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் கமாண்டோ ட்ரெஸில் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போல பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தற்போது அதில் கேப்டனும் கையில் துப்பாக்கியுடன் இடம் பிடித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தைக்கு நடக்கும் துரோகத்தை மகன் டைம் ட்ராவல் செய்து முறியடிப்பதுதான் படத்தின் கதை என கூறப்படுகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. ‘செந்தூரப்பாண்டி’ படத்தில் விஜயகாந்த், விஜயின் அண்ணனாக சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார். அப்படம் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. vijayakanth featured goat movie

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேசிய விருது பிரிவில் இந்திரா காந்தி பெயர் மாற்றம்!

விவசாயிகள் போராட்டம்: மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

மோடி இந்தியாவில் இதைச் செய்திருந்தால்.. மனோ தங்கராஜ் காட்டம்!

வீராணம் ஏரியின் நீர் மட்டம்: சென்னைக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்?

vijayakanth featured goat movie

+1
4
+1
4
+1
3
+1
15
+1
3
+1
8
+1
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *