நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று (ஜூலை 27) வெளியாகியுள்ளது.
வரலாற்று பின்னணியை மையமாக கொண்டு உருவாகி வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. இந்த படத்தை ‘ராக்கி’ ‘சாணிக்காயிதம்’ போன்ற படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அருண் மாதேஷ்வரன் இயக்கி வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக தனுஷ் மற்றும் நாயகியாக பிரியங்கா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.
மேலும், சதீஸ், ஜான் கொக்கன், சுரேஷ் மூர், சிவராஜ் குமார் மற்றும் நிவேதிதா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.
முன்னதாக ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 30 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இன்று (ஜூலை 27) இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாளை ஜூலை 28 நள்ளிரவு 12.01 மணிக்கு ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது தனுஷ் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தன்னுடைய 50 வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வயதான யானையா, பட்டத்து யானையா?: செல்லூர் ராஜூ- தங்கம் தென்னரசு மோதல்!
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஆகஸ்ட் 1-க்கு ஒத்திவைப்பு!