கேப்டன் அமெரிக்கா: வாழ்த்தும் ரசிகர்கள்!
சினிமா ரசிகர்களுக்கு மொழி ஒரு தடை கிடையாது. ஒவ்வொருவரும் அவர்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை கொண்டாடி மகிழ்வார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தான் கேப்டன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் கிறிஸ் எவன்ஸ் . இன்று(ஜூன் 13) தன்னுடைய 42 வது பிறந்த நாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களின் மூலம் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்கத் திரைப்பட நடிகரான இவர் 1997 ஆம் ஆண்டு பயோ டிவேர்சிட்டி என்ற குறும்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இதன் மூலம் பிரபலமான இவர் 2000 ஆம் ஆண்டு ‘தி நியூ கமெர்ஸ்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் தான் இவரது முதல் வெள்ளித்திரையாகும். அதற்குப் பிறகு ‘நாட் அனதர் டீன் மூவி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அடியெடுத்து வைத்தார். அதற்குப் பிறகு வாய்ப்புகள் சரியாக கை கொடுத்தாலும் மக்களிடத்தில் வெற்றி பெற முடியவில்லை.
பின்னர், 2005 ஆம் ஆண்டு ஃபென்டாஸ்டிக் 4 என்ற திரைப்படத்தில் நெருப்பு மனிதனாக நடித்து குழந்தைகள் அனைவரையும் தன் வசப்படுத்தினார். இந்த படத்திற்காகப் பல பாராட்டுகளையும் பெற்றார்.
அதற்குப் பிறகுதான் 2011 ஆம் ஆண்டு மார்வெல் செஷனில் கேப்டன் அமெரிக்கா திரைப்படத்தில் நடித்து உலகளவில் கொடி கட்டி பறந்தார். பென்டாஸ்டிக் 4 முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
கேப்டன் அமெரிக்கா முதல் அவெஞ்சர் திரைப்படம் தொடங்கி தி அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா தி வின்டர் சோல்ஜர், தி அவெஞ்சர்ஸ் எண்டு கேம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்றார்.
இவர் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்து வளர்ந்தவர். இவரது தாயார் லிசாமேரி கான்கார்ட் யூத் தியேட்டரில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இவரது தந்தை ராபர்ட் பாப் ஒரு பல் மருத்துவர். இவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
பென்டாஸ்டிக் 4, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களுக்காக பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார். கேப்டன் அமெரிக்கா திரைப்படத்திற்காகப் பல பிரிவுகளில் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே உலகம் முழுவதும் ரசிகர்கள் கிடைப்பார்கள். உலகம் முழுவதும் பிரபலமாகி கொடி கட்டி பறப்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
அப்படி ஒரு வளர்ச்சியை தன் வசம் வைத்து இன்னும் இளமையாக வளம் வரும் கிறிஸ் எவன்ஸுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் மில்க் ஷேக்!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!