தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை த்ரிஷா.
தமிழில் விஜய் சேதுபதியுடன் நடித்த 96 படத்திற்குப் பின் சொல்லிக்கொள்ளும்படியாக புதிய படங்களில் த்ரிஷா நடிக்கவில்லை புதிய பட வாய்ப்புக்களும் இல்லாமல் இருந்து வந்தார்.
செப்டம்பர் 30 அன்று வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்திருந்தார்.
படத்தில் இவரது தோற்றம், படத்தின் விஸ்வரூப வெற்றி காரணமாக த்ரிஷாவுக்கு ரசிகர்கள் அதிகரித்தனர்.
ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த பின் அவருக்கான வாய்ப்புகள் அதிகரித்தது அதே போன்ற நிலைமை பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த பின் த்ரிஷாவுக்கான புதிய பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன.
அஜித்குமார், விஜய் இருவரது படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதோடு நயன்தாராவிற்கு போட்டியாளராக மாறி வருகிறார்.
இந்த நிலையில் த்ரிஷா தற்போது வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.
அந்த சுற்றுப்பயணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் தனது வலைதள பக்கங்களில் பதிவேற்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.
நேற்று (அக்டோபர் 29) இவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக தற்போது பரவி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை இவர், இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரில் இருக்கும் சாய்ந்த கோபுரத்தின் பக்கத்திலிருந்து எடுத்திருக்கிறார்.
உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் சாய்ந்த கோபுரத்தை நோக்கி, இரண்டு கைகளை காட்டி கோபுரம் சாய்ந்துவிடாமல் இவர் முட்டுக் கொடுத்து பிடித்திருப்பது போல நிற்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
அதைப் பார்த்து, ’குந்தவைப் பிராட்டி இவர் என்பதால் எந்த கோபுரத்தையும் சாய்ந்து விடாமல் நிமித்தி விடுவார், நாங்க தாங்கிப் பிடிக்க வரலாமா..?’ என அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
இராமானுஜம்
தென்னகத்து போஸ்: பிரதமர் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை மரியாதை!
கோவை கார் வெடிப்பு: அண்ணாமலையிடம் இருக்கும் ரகசிய ஆவணம் என்ன?