’எழுத்தாளர்களுக்கு மரியாதையே இல்லை’: படவிழாவில் பாக்யராஜ் வேதனை!

சினிமா

எழுத்தாளர்கள், கதை வசனகர்த்தாக்களுக்கு தமிழ் திரையுலகில் முக்கியத்துவமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டதாக நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரித்துள்ள படம் பம்பர். மீரா கதிரவன், மற்றும் ‘கொம்பன்’ மற்றும் ‘விருமன்’ பட இயக்குநர் முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய எம்.செல்வக்குமார் இயக்கியுள்ளார்.

வெற்றி-ஷிவானி நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, கேரள மாநில “பம்பர்” லாட்டரியை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘பம்பர்’.

ஜூலை 7ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழநி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்திற்கு பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…

இந்த படத்தில் நான் ஆறு பாடல்களை எழுதியுள்ளேன், ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை, எல்லா பாடல்களும் ஒன்றோடு ஒன்று மாறுபட்டு இருக்கும், அனைத்துமே நன்றாக இருக்கும். அறத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்றார்.

Bumper Movie Trailer and Audio

இயக்குநர் முத்தையா பேசியதாவது…

இயக்குநர் செல்வம் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார், அனைவருடனும் சுலபமாக இணைந்து பணியாற்றுவார்.

செல்வத்திடம் ஒரு நல்ல கிராமத்துச் சாயல் உள்ளது , என்னிடம் வந்து கதையைச் சொன்னார், நான்தான் தயாரிப்பதாக இருந்தது.

நடிகர் வெற்றியிடம் கதை சொன்னதும் உடனே ஒத்துக்கொண்டு நடித்தார் என்றார்.

 நடிகர் வெற்றி பேசியதாவது…

முதன்முறையாக நான் ஒரு பாடலுக்கு இந்தப்படம் மூலம் நடனம் ஆட முயற்சி செய்துள்ளேன், தொடர்ந்து திரில்லர் படம் மட்டும்தான் செய்கிறேன் என்று என் மீது ஒரு விமர்சனம் இருக்கிறது, இந்த படத்தில் அது மாறும் என்று நம்புகிறேன்.

இயக்குநர் கதையின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார், அவர் நினைத்தது போலப் படம் வந்துள்ளது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் அனைத்து பாடல்களும் நன்றாக வந்துள்ளது, கண்டிப்பாக இந்த படம் உங்களுக்குப் பிடிக்கும் என்றார். 

இயக்குநர் K பாக்யராஜ் பேசியதாவது…

அறிமுக இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அவர் வேலை பார்த்த இயக்குநர்கள் இங்கு வந்துள்ளதை பார்க்கப் பெருமிதமாக இருக்கிறது.

டிரெய்லர் நன்றாக உள்ளது, புரியாத பாடல்கள் தான் தற்போது நிறைய வந்துகொண்டிருக்கிறன, ஆனால் இந்தப்படத்தில் பாடல்கள் கேட்க நன்றாக உள்ளது.

நடிகர் வெற்றி முதல் படத்தில் தன் சொந்த தயாரிப்பில் நடித்தார், அதிலும் நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து நடித்தார்.

ஒவ்வொரு படத்திலும் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார். அவருக்கு என் வாழ்த்துகள்.

படத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் பாடல் பாடுபவர்கள் முதல் உரிமை இருக்கிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு உரிமை இல்லாமல் இருக்கிறது.

எழுத்தாளர்கள், கதை வசனகர்த்தாக்களுக்கு இங்கு முக்கியத்துவமும், மரியாதையும் இல்லாமல் போய் விட்டது. அதற்குக் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம் இனிமேலாவது இந்த நிலை மாற வேண்டும்.” என்றார்.

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: இந்தியா சாதனை!

வெண்புள்ளி பாதித்தவர்களை தனிமைப்படுத்தினால் நடவடிக்கை: எச்சரித்த மா.சுப்பிரமணியன்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1