கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியே குழாயடிச் சண்டை களமாக மாறியுள்ளது. பிக்பாஸ் எடிட்டர்ஸே குழம்பிப் போகும் அளவுக்கான இடி மின்னலுடன் பொழிந்த கன்டென்ட் மழையில் எதை வைப்பது, எதை எடுப்பது என தெரியாமல் மாற்றி, மாற்றி எடிட் செய்திருந்ததும், நேற்றைய எபிசோட் தாமதமாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானதும் குறிப்பிடத்தக்கது. fight continued on biggboss7 day 37
திடீர் புயலாக ஒரு பக்கம் அர்ச்சனா மாற, அதே சலசலப்பு சூழ்நிலையிலிருந்தே இன்றைய எபிசோட் தொடங்கியது.
’உன்னப் பார்க்குறப்போ எனக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது’ என சொன்ன விஷ்ணுவே பூர்ணிமாவுடன் சண்டை போட ஆரம்பிக்க, அதில் விஷ்ணுவை சந்தர்ப்பவாதி என பூர்ணிமாவும், ‘நீ மாயாக்கே ஸ்கெட்ச் போட்டேல்ல’ என விஷ்ணுவும் மாறி, மாறி போட்டி போட்டு சண்டை போட்டனர். ‘உண்மைய சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க’ என வடிவேலு சொன்னது தான் அப்போது நியாபகம் வந்தது.
மறுபக்கம் இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைப்போம் என நிக்ஷன் அர்ச்சனாவை அழைத்து ஐஷூ குறித்து விளக்கி, அவரிடம் மன்னிப்பு கேட்குமாறு கேட்டுக்கொள்ள, ‘அவருக்கு நான் பேசியது வேறு மாதிரியாக பாதித்திருந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்கிறேன்’ என அர்ச்சனாவும் கொஞ்சம் இறங்கி வர, விடவில்லை இந்த ‘புல்லி கேங்(bully gang)’.
உடனே அர்ச்சனாவை வழக்கம் போல் மொத்தமாக வந்து தாக்க ஆரம்பிக்க, மீண்டும் தொடங்கியது குழாயடிச் சண்டை. இந்த எபிசோட் முழுக்க சண்டை போடுவது, நூறு முறை கன்ஃப்சன் ரூமுக்கு அழைக்கும்படி பிக் பாஸிடம் கேட்பதுமாகத் தான் இருந்தது. இதை கொழுத்திப் போட்டதே பிக் பாஸ் தான் என்பது இவர்களுக்கு தெரியாது போலும்.
சாப்பாத்தி போடச் சொல்லி ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் ஆர்டர் போட்ட கேப்டன் மாயா, மறுபக்கம் அர்ச்சனாவை வெறுப்பேத்தவும் ஜோவிகாவை ஆர்டர் போட்டார். ஸ்மால் பாஸ் வீட்டாரை கழிவறைக்கு கூட போக விடாமல் செய்வது, நாப்கின், டூத் பிரஸ் போன்ற அன்றாட தேவைகளை எடுத்துக்கொள்வது என மாயாவின் கேப்டன்சி அராஜகத்தின் உச்சத்தில் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
இத்தனை டார்ச்சர் மத்தியிலும் தொடர்ந்து அர்ச்சனாவும், விசித்ராவும் போராடினர். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த விசித்ரா, அப்படியே கூலாக ஸ்மால் பாஸ் வீட்டை விட்டு அர்ச்சனாவுடன் வெளியேற, பிக் பாஸ் ரூல்ஸ் படி கேஸ் கட்டானது.
அங்கும் படையெடுத்து வந்த மாயாவின் ’புல்லி கேங்’ ’சண்டைக்கு வாடா!’ என உசுப்பேத்தியும் பலமாக நின்றனர் விசித்ரா மற்றும் அர்ச்சனா.
இடையில், ஆடியன்ஸாக தொடர்ந்து மிக்சர் சாப்பிட்டு வரும் விக்ரம் புகுந்து, அவர் பங்குக்கு ஸ்கோர் செய்வதற்காக எதையோ பேச ஆரம்பிக்க, ‘தம்பி நீ லிஸ்ட்லயே இல்ல டா. போய் ஒழுங்கா ஒரு வாரம் ஜாலியா இரு போ, ஏன் பெரியவங்க சண்டைக்குலாம் வர’ என்பது போல் விசித்ரா டீல் செய்தது தக் லைஃப் மொமெண்ட் தான்.
அதன் உச்சகட்டமாக டூத் பிரஷ் கிடைத்ததும், ‘அந்த கேப்டன இங்க வர சொல்லு, நான் பேசனும்’ என அதே இடத்தில் உட்கார்ந்து மாஸ் காட்டிய காட்சியை படத்தின் சீனாகவே வைக்கலாம். fight continued on biggboss7 day 37
இதற்கு பிறகு நேற்று கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை ஒளிபரப்பக் கூட இந்த எபிசோடில் நேரமில்லை. சொல்லப் போனால் இந்த எபிசோட் ஏறத்தாழ இன்று ஒன்றரை மணிநேரம் ஓடியது. அந்த அளவிற்கு பிக் பாஸ் எடிட்டர்ஸையே கதிகலங்க வைத்துள்ளது இன்றைய எபிசோட்.
மறுபக்கம் சோசியல் மீடியாவில் பிரதீப்பிற்கான ஆதரவு, கமல்ஹாசனின் தீர்ப்பின் மீதுள்ள அதிருப்தி என அனைவரும் அவரை ரவுண்டு கட்டி அடித்து வரும் நிலையில், இந்த வாரம் இந்த பிரச்சனையை கமல் எப்படி அணுகுவார் என்பதே பெரும் ஆவலாக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷா
தமிழகம் முழுவதும் 7,200 பட்டாசு கடைகள்: சென்னையில் 890 கடைகளுக்கு அனுமதி!
நிரம்பும் வைகை அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
சேகர்பாபு- பரந்தாமன்… சேர்த்து வைத்த கமல்ஹாசன்