அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும், விடாமுயற்சி படத்தின் BTS காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித் தற்போது பிசியோதெரபி சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்றுள்ளார். அங்கு அவர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சன்ரைசர்ஸ் அணியின் பிசியோதெரபிஸ்ட் தான், அஜித் குமாருக்கும் பிசியோதெரபிஸ்ட் என்பதால் அஜித் ஹைதராபாத் சென்றுள்ளார்.
நீண்டநாட்களாக நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். அதோடு இனி ஷூட்டிங் தொடருமா? தொடராதா? என்னும் கேள்வியும் எழுந்தது.
இந்தநிலையில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்பது போல, தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட காட்சிகளை படக்குழு இன்று (ஏப்ரல் 4) வெளியிட்டுள்ளது. வீடியோவில் ஆரவ் கழுத்தில் கட்டுடன் சீட்டில் அமர்ந்திருக்க, அஜித் வேகமாக ஜீப்பினை ஓட்டுகிறார்.
Vidaamuyarchi filming
November 2023.#VidaaMuyarchi pic.twitter.com/M210ikLI5e— Suresh Chandra (@SureshChandraa) April 4, 2024
அப்போது ரோட்டில் இருந்து விலகிய ஜீப் சரிவில் இறங்கி தலைகீழாகக் கவிழ்கிறது. இதைப்பார்த்து படக்குழுவினர் வேகமாக ஓடிவருகின்றனர்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘இப்படி உயிரைக் கொடுத்து நடிக்கணுமா?’, ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குறீங்க’ என அக்கறையுடன் அஜித்தைக் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதனால் இந்தியளவில் #Ajithkumar𓃵 என்னும் ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னால் பில்லா 2 படத்தில் ஹெலிகாப்டர் காட்சி, வலிமை படத்தில் பைக்கில் இருந்து கீழே விழுந்த காட்சி ஆகியவற்றில் டூப் போடாமல் நடித்து, ரசிகர்களை அஜித் அதிரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எய்ம்ஸ் குறித்து மோடியிடம் கேட்டால் எடப்பாடிக்கு கோபம்: உதயநிதி தாக்கு!
அதிமுக திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர்: ஸ்டாலின் மீது எடப்பாடி குற்றச்சாட்டு!
“சனாதனத்திற்கு எதிராக பேச முடியாது” : காங்கிரஸில் இருந்து விலகினார் கவுரவ் வல்லப்