மார்பக புற்றுநோய்: அங்காடித் தெரு’ சிந்து காலமானார்!

சினிமா

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 44 வயதான நடிகை ‘அங்காடித் தெரு’ சிந்து இன்று (ஆகஸ்ட் 7) காலமானார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ’அங்காடித் தெரு’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து.

பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்த இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்காக சிகிச்சை எடுக்கத் தொடங்கிய சிந்துவுக்கு பாதிப்பு அதிகமானதால், ஒரு பக்க மார்பகம் அகற்றப்பட்டது.

அதன்பின்னர் நடிகை சிந்துவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவரது சிகிச்சை பெறும் வீடியோவை அவரது மகள் இணையத்தில் பதிவிட்டு அம்மாவுக்காக வேண்டிக்கொள்ளுமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 2.15 மணியளவில் நடிகை சிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நடிகை அங்காடி தெரு சிந்துவின் மறைவுக்கு ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கலைஞருக்கு ஸ்டாலின் புகழஞ்சலி!

விசைத்தறியில் கைத்தறி ரகங்களைத் தடுக்க பறக்கும் படை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *