பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் இன்று (மார்ச் 24 ) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ.
தமிழில் இவர் பாடிய ‘வசீகரா’, ‘ஒன்றா ரெண்டா ஆசைகள்’, ‘யாரோ மனதிலே’ உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் ப்ளே லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பாம்பே ஜெயஸ்ரீ இங்கிலாந்திற்கு இசைக் கச்சேரி நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அங்கு எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், இவரது மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த செய்தி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள பாம்பே ஜெயஸ்ரீ-க்கு சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாக மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சொதப்பல் SKY சூப்பர் SKY ஆக தினேஷ் சொல்லும், ‘ஜெர்சி’ சீக்ரெட்!
ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுகிறது! – முதல்வர் ஸ்டாலின்