ஸ்ரீதேவி இறப்புக்கு இதுதான் காரணமா? – மனம் திறந்த போனிகபூர்

Published On:

| By Kumaresan M

நடிகை ஸ்ரீதேவி, கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்திற்கு சென்றவர் பாத்ரூம் டப்பில் விழுந்து இறந்து போனார்.  மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரின் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாக சொல்லப்பட்டாலும், எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்  சினிமா வரை சென்று  புகழ்பெற்ற ஸ்ரீதேவி திடீரென்று இறந்து போனது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  சமீபத்தில்,   மும்பையில் ஒரு தெருவிற்கு ஸ்ரீதேவி பெயர் வைக்கப்பட்டது. தற்போது, அவரின்  மகள் ஜான்வி கபூரும் சினிமாவில் நாயகியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில்  ஒரு பேட்டியில் தயாரிப்பாளரும், ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தனது மனைவியின் உடல்நலம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘ஸ்ரீதேவி எப்போதுமே தனது தோற்றத்தைப் பற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தார். எப்போதும் அழகாக இருக்க வேண்டுமென்பதற்காக கவலைப்பட்டுக் கொண்டே இருந்தார்.

அழகாக காணப்பட தனது உணவில் ஸ்ரீதேவி செய்த கட்டுப்பாடு, அதனால்  உடல்நலக்குறைவு ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவியின் மரணத்திற்குப் பிறகு  தனது வீட்டிற்கு வந்த நாகார்ஜுனாவுடன் நடந்த உரையாடலை  நினைவு கூர்ந்து போனி கபூர் கூறுகையில்,  “ஸ்ரீதேவி அடிக்கடி க்ரைஷ் டயட் முறைகளை மேற்கொண்டார். அப்படி க்ரைஷ் டயட் இருந்த போது படப்பிடிப்பில் ஸ்ரீதேவி மயங்கி விழுந்துவிட்டார் என்று நாகார்ஜுனா என்னிடம் கூறினார்.  சில சமயங்களில் தான் விரும்பிய தோற்றத்தை அடைய சாப்பிடாமல் பட்டினி கிடந்தார் ஸ்ரீதேவு.

எங்களது திருமணத்திற்கு பிறகு அவருக்கு லோ பிபி பிரச்சனை இருந்தது. அவரின் கடுமையான உணவுக் கட்டுப்பாடுகளால் அவரின் உடல் போராட தொடங்கியது. அடிக்கடி உப்பு இல்லாமல் சாப்பிட்டு வந்தார். வெளியே ஹோட்டல் சென்றாலும் உப்பு இல்லாத உணவை தான் சாப்பிடுவார் ‘ என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

‘கலைஞர் 100 – வினாடி வினா’… கனிமொழிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

மனைவினா அப்படியே உருகிவிடுவார் நவ்ஜோத் சித்து… காரணம் அப்படி ஒரு சோகம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share