ஜான்வி காதலுக்கு ‘பச்சைக்கொடி’ காட்டிய போனி கபூர் … மாப்பிள்ளை யாருன்னு பாருங்க!
நடிகை ஜான்வி கபூரின் காதலுக்கு அவரது தந்தை போனி கபூர் பச்சைக்கொடி காட்டி இருக்கிறார்.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் ஜான்வி தற்போது வளர்ந்து வரும் இளம்நடிகையாக இருக்கிறார். பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி தற்போது டோலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார்.
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக தேவாரா, ராம் சரண் ஜோடியாக RC 16 ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.
முன்னதாக ஷிகர் பஹாரியா என்பவருடன் ஜான்வி டேட்டிங் செய்ததாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து தன்னுடைய காதலை வெளிப்படையாக ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஜான்வி ஒப்புக்கொண்டார்.
சமீபத்தில் தன்னுடைய 27-வது பிறந்தநாளின்போது ஷிகருடன் இணைந்து, திருப்பதிக்கும் ஜான்வி சென்று வந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.
இந்தநிலையில் ஜான்வியின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் முதன்முறையாக ஜான்வி காதல் குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ”இப்போது இருக்கும் தலைமுறை நம்மை விட வேகமாக இருக்கின்றனர்.
அவர்களுக்கு எல்லாம் தெரிகிறது. நம்மால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. என்றாலும் அவர்கள் விஷயத்தில் நான் தலையிடுவது இல்லை.
என்னுடைய குழந்தைகள் என்னோடு இருக்கும்போது இந்த உலகமே என்னோடு இருப்பதாக உணர்கிறேன்
என்னுடைய மகள்களைப் போலவே ஷிகரையும் நான் நேசிக்கிறேன். ஜான்விக்கு முன்பாகவே எனக்கு அவரைத் தெரியும்.
ஷிகர் பாசிட்டிவாகவும் நல்ல நட்புடனும் இருப்பார். ஜான்வி -ஷிகர் காதலில் எந்த குறையும் இருக்காது என நான் உறுதியாக சொல்வேன்.
அவரைப் போன்ற ஒருவர் எங்கள் குடும்பத்திற்குள் வருவதை ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். விரைவில் பெரியவர்களிடம் பேசி திருமண ஏற்பாடுகளை மேற்கொள்வோம் ”, என்றார்.
இதனால் விரைவில் ஜான்வி கபூர் – ஷிகர் பஹாரியா திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷிகர் பஹாரியா அரசியல்வாதியும், முன்னாள் மகாராஷ்டிரா முதல்வருமான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘அந்த விஷயத்துல நான் கஞ்சன் தான்’… பகிரங்கமாக ஒப்புக்கொண்ட சிரஞ்சீவி
Paiyaa: கார்த்தியின் ஜோடியாக ‘நடிக்க’ வேண்டியது இவர் தானாம்!
ஸ்டார் ஹீரோவிற்கு வில்லியாகும் ஆண்ட்ரியா?