பொம்மை நாயகி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் யோகி பாபு பேசியுள்ளார்.
பா. ரஞ்சித் தயாரிப்பில் யோகிபாபு நடிப்பில், பொம்மை படம் தயாராகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜனவரி 29) சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. படகுழுவினர் அனைவரும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், “யோகி பாபு ஒரு நல்ல நடிகர். பரியேறும் பெருமாள் படத்தில் அவரது நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. அதை வைத்துத் தான் இந்த படத்திற்கு அவரை தேர்வு செய்தோம் என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் யோகி பாபு, ”இந்த படத்துல என்ன காமெடி பண்ண விடல. ஏனென்றால் கதை அந்த மாதிரி. எல்லாருமே சொன்னாங்க நல்லா நடிக்குறாரு அப்படினு. ஆனா அது எல்லாமே ஒரு டைரக்டர் கையில தான் இருக்கு, நடிகர்கள் கிட்ட கிடையாது.

நான் அனைத்து மேடைகளிலும் கமெடியன் என்று சொல்வதற்குக் காரணம் என்னவென்றால் அதுதான் எனது தொழில். எப்போதும் நான் கமெடியன் தான். கிண்டல் செய்திருக்கிறார்கள். மேக்கப் போடவில்லை என்று திட்டியிருக்கிறார்கள்.
எல்லா நடிகர்களுக்கும் நடப்பது போல எனக்கும் நடந்தது. ஆனால் எனக்குக் கொஞ்சம் அதிகமாக நடந்தது. எப்பவுமே என் முகம் ஜோக்கர் முகம் தான். தமிழ் சினிமா மட்டுமில்லை எந்த சினிமாவிற்கு போனாலும் நான் காமெடியன் தான்” என்று பேசியிருந்தார்.
மோனிஷா
பத்ம விருதுகளை வென்ற பழங்குடியினர்! – பிரதமர் பெருமிதம்
துணிக்கடை கேட் விழுந்து சிறுமி பலி: 2 பேர் கைது!