பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உடல்நலம் முன்னேறி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான பாம்பே ஜெயஸ்ரீ, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.
இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களைப் பாடியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ.
இவர் சமீபத்தில் ஒரு இசை கச்சேரி நிகழ்ச்சிக்காக லண்டன் சென்றிருந்தார்.
அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, ஹோட்டல் அறையில் மயங்கிய நிலையில் இருந்தார். உடன் சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாகப் பாம்பே ஜெயஸ்ரீ தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாம்பே ஜெயஸ்ரீ ட்விட்டர் பக்கத்தில்,
“மருத்துவ சிகிச்சைகள் பயனுள்ளதாக இருக்கின்றன. ஜெயஸ்ரீ ராம்நாத்தின் உடல்நிலை முன்னேற்றமானது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அடியிலும் இந்திய அரசு பக்கபலமாக இருந்து வருகிறது.
அனைவரது அன்பிற்கும், ஆதரவிற்கும், பிரார்த்தனைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
ராகுல் தகுதிநீக்கம்: சட்டமன்றத்தில் காங்கிரஸ் இன்று உள்ளிருப்பு போராட்டம்!
காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் இந்திய தூதரகங்கள்!