சந்தரமுகி 2 ஆம் பாகத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியானது.
இந்த படத்தில் பிரபு, ஜோதிகா, மாளவிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, கே.ஆர். விஜயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்று மாஸ் ஹிட் கொடுத்தது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று இயக்குநர் பி. வாசு நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார்.

இந்த முயற்சியின் பலனாக தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 ஆம் பாகம் தயாராகி வருகிறது. லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கவிருக்கும் நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கவுள்ளார். இதனை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கங்கனா ரனாவத் ஜெயம்ரவியின் தாம்தூம் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
கங்கனா ரனாவத் தற்போது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பயோபிக் திரைப்படமான எமர்ஜென்சி என்ற படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
டிஜிட்டல் திண்ணை: ஜெ. நினைவு தினம்- தள்ளிப்போன பொதுக்குழு வழக்கு: எடப்பாடி ஷாக்!