திருமணமாகி 12 வருடங்களுக்கு பின் தன்னுடைய காதல் கணவரை பிரிவதாக, பாலிவுட் நடிகை இஷா தியோல் அறிவித்துள்ளார்.
தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘ஆய்த’ எழுத்து திரைப்படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்தவர் இஷா தியோல். அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஓர் உண்மை சொன்னால் மன்னிப்பாயா’ பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
தமிழில் அதற்குப்பிறகு இஷா படங்கள் எதுவும் நடிக்கவில்லை. இதற்கிடையில் தன்னுடைய பள்ளி பருவ காதலரும், தொழிலதிபருமான பாரத் தக்தானி என்பவரை 2௦12-ம் ஆண்டு இஷா திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில், மனமொத்து பிரிவதாக இஷா-பாரத் இருவரும் அறிவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாங்கள் பரஸ்பரம் இணக்கமாக பிரிந்துவிட முடிவு செய்துள்ளோம். அதேசமயம் எங்கள் இருவரின் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்போம்”, என தெரிவித்து இருக்கின்றனர்.
பாலிவுட் பிரபலங்கள் தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியரின் மகள் தான் இஷா தியோல் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கூட்டாட்சி தத்துவத்தின் சாம்பியனாக ஒருவர் இருந்தார்…. டெல்லியில் மோடியை விமர்சித்த பிடிஆர்
Propose Day 2024 : தமிழ் சினிமாவின் டாப் 10 காதல் வசனங்கள்!