நடிகை ஹனி ரோஸ் கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரின் பேரில் செம்மனூர் ஜுவல்லரி அதிபர் பாபி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹனிரோஸ் புகாரின் பேரில் பாபி செம்மனூர் மீது ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தது. இதையடுத்து, எர்ணாகுளம் போலீசார் பாபியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர். அவர் முன்ஜாமீன் பெற முயன்று கொண்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த நிலையில், வயநாட்டிலுள்ள ரிசார்ட்டில் அவர் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எர்ணாகுளம் போலீசார் வயநாடு போலீசாருக்கு தகவல் அளித்து பாபியை கைது செய்தனர். அவரை இன்றே கொச்சி கொண்டு வந்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மத்திய பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார், பாபியிடம் விசாரணை நடத்துகிறார்.
ஹனிரோசிடத்தில் தான் தவறாக எதுவும் நடக்கவில்லை. தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது என்று பாபி விளக்கமளித்தும் பலன் அளிக்கவில்லை. இதற்கிடையே, கேரள உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
பெண்களிடன் உடல் அமைப்பை வருணிப்பது. உங்கள் உடல் அமைப்பு நன்றாக இருக்கிறது என்று பேசுவது அல்லது மெசேஜ் அனுப்புவது பெண்மையை அவமதிப்பதற்கு சமம் ஆகும். இதுவும் பாலியல் வன்கொடுமையாக கருதப்பட வேண்டுமென்று மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக பாபிக்கு சிக்கல் மேலும் அதிகரித்துள்ளது. ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், பாபி சிறை செல்வது உறுதி என்றே சொல்கிறார்கள்.
கேரளாவில் மிகுந்த செல்வாக்கு கொண்டவர் பாபி. கடந்த 2012 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் மரடோனாவை இந்தியாவுக்கு அழைத்து வந்து விழா நடத்துமளவுக்கு பண பலம் படைத்தவர். பல அறப்பணிகளை செய்து வந்தவர் இப்போது, கைதாகி இருப்பது அவரின் அபிமாணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
அனுமதியில்லாமல் போராடினால்… யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு : ஸ்டாலின்
ஆளுநரே பொறுப்பு : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சட்டப்பேரவையில் விவாதம்!