விஜய் நடிக்கவுள்ள 69வது படத்தை எச்.வினோத் இயக்க உள்ளார் என்று 2024 செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. நாயகியாக பூஜா ஹெக்டே இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவு சத்யன் என தகவல்கள் வெளியானது.
கர்நாடக மாநிலம் பெங்களுரில் உள்ள கே.வி.என் புரடெக்சன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா என்பவர் படத்தை தயாரிக்கிறார்.
முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளதாகச் சொல்லப்பட்டுள்ள நிலையில், இது அவரது கடைசிப் படம் என்று கூறப்பட்டது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்தப் படம் குறித்து வெளியிடப்பட்ட முதல் பார்வையில், நீல வண்ணத்தின் பின்னணியில், ஒரு கை தீப்பந்தம் ஏந்தியிருப்பது போன்ற தோற்றம் இருந்தது. மேலும் அதில், “ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
இவை அனைத்தும் அரசியல் பேசும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
படத்திற்கான பூஜை அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் அடுத்த நாள் படப்பிடிப்பு தொடங்கி முதல் கட்டமாக 15 நாட்கள் நடைபெறும் என கூறப்பட்டது. அதற்காக அரங்கம் அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இவை எல்லாமே நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கும் என்பதை ஒட்டி திட்டமிடப்பட்டது.
ஆனால் அவரது கட்சி மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் படப்பிடிப்பிலும் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்சி மாநாட்டை விட படம் தொடங்குவது முக்கியம். எனவே திட்டமிட்டபடி அக்டோபர் ஐந்தாம் தேதியே படப்பிடிப்பைத் தொடங்கிவிடலாம் என்று விஜய் கூறிவிட்டாராம்.
அதனால் படம் சம்பந்தமான தகவல்களை தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அறிவிக்க தொடங்கியுள்ளனர். நேற்று மாலை கேவி என் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் இந்தி நடிகர் பாபி தியோல் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடிகர் பாபி தியோல் இந்தி சினிமாவில் காதல் நாயகனாக நடித்து பிரபலமானவர். ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்திய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் இந்திப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் அகில இந்திய அளவில் கவனத்திற்குள்ளானார்.
தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள கங்குவா படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தில் பாபி தியோல் நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு பெயரிடப்படாத விஜய் 69 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : விசிக மது ஒழிப்பு மாநாடு முதல் வேட்டையன் டிரைலர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : தேங்காய் வெல்ல லட்டு
பியூட்டி டிப்ஸ்: மழைக்காலத்தில் உங்களை அழகாக்கும் ஆடையும் அணிகலன்களும்!
மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎப் வாசன் நீக்கம்… பின்னணி இதுதான்!
பேட் டச்: தாயிடம் போட்டு கொடுத்த குழந்தை… 10 ஆம் வகுப்பு மாணவன் கைது!