blue star and singapore saloon movie released january 25

ப்ளூ ஸ்டார், சிங்கப்பூர் சலூன்: ஜனவரி 25-ல் வெளியாக காரணம் இதுதான்!

சினிமா

அசோக் செல்வன், சாந்தனு நடித்த ப்ளூ ஸ்டார் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி நடித்த சிங்கப்பூர் சலூன் ஆகிய திரைப்படங்கள் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 11 அன்று அஜீத்குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதின.

இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் பிரம்மாண்டமான வெற்றியை பெற முடியவில்லை. அதே நேரம் அஜீத்குமார், விஜய் படங்களுக்கான இயல்பான, நியாயமான வசூல் திரையரங்குகள் மூலம் கிடைத்தன.

இந்த வருடம் ஜனவரி 2024 பொங்கல் போட்டியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படங்கள் நேரடியாக மோதுகின்றன.

இந்த படங்களுடன் அருண்விஜய் நடித்த சேப்டர் மிஷன், விஜய் சேதுபதி நடித்த மேரி கிறிஸ்துமஸ் படங்கள் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருந்தாலும் திரையரங்குகள் மத்தியில் அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமையும், அமோக வரவேற்பும் இருக்கிறது.

இரண்டு படங்களும் குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அதாவது ஜனவரி 25 வரை திரையரங்குகளில் ஓடவேண்டும் என்கிற வேண்டுகோளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இரண்டு படங்களுமே அதிகபட்சமாக 900 திரைகள் வரை திரையிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. படம் நன்றாக இருந்தால் மூன்றாவது வாரமும் திரையரங்குகளில் இருந்து தூக்கமுடியாது.

எஞ்சிய திரையரங்குகளில் விஜய்சேதுபதி நடித்துள்ள மேரி கிறிஸ்துமஸ் அருண்விஜய் நடித்துள்ள சேப்டர் மிஷன், தெலுங்கில் தயாராகியுள்ள ஹனுமான் ஆகிய படங்கள் திரையிடப்படக்கூடும்.

இந்தசூழலில், புதிய திரைப்படங்களை ரிலீஸ் செய்ய இயலாது. ஆனால் ஜனவரி 25 அன்று  அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் நீலம் புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படம் ப்ளு ஸ்டார் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் ப்ளூஸ்டார் படத்தில் நடித்துள்ளனர்.

அதே போன்று காஷ்மோரா, ஜுங்கா,  படங்களை அடுத்து கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேறுபடங்கள் ஜனவரி 25 வெளியீட்டுக்கு திட்டமிட வேண்டாம் என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் இரண்டு படங்களையும் வெளியிடும் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *