சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் என நடிகர் விஜய் சேதுபதியை, ப்ளூ சட்டை மாறன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
20-வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி துவங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த திரைப்பட விழாவில் 51 நாடுகளைச் சேர்ந்த 102 திரைப்படங்கள் திரையிடப்பட்டது.
திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களில் இருந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 9 விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சிறந்த திரைப்படம் – கிடா, இரண்டாவது சிறந்த திரைப்படம் – கசட தபற, சிறந்த நடுவர் விருது – இரவின் நிழல், சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (மாமனிதன்), பூ ராமு (கிடா), சிறந்த நடிகை – சாய் பல்லவி (கார்கி),
சிறந்த ஒளிப்பதிவு – ஆர்தர் வில்சன் ( இரவின் நிழல்), சிறந்த ஒலி அமைப்பு – பிஜே ரூபன் (நட்சத்திரம் நகர்கிறது), சிறந்த படத்தொகுப்பு – பிரேம் குமார் ( பிகினிங்), சிறப்பு விருது – ஆதார் ஆகிய படங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
விருது பெற்றவர்களுக்கு திரைப்பட துறையினர் பலரும் தங்களது பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சிறந்த நடிகராக விஜய் சேதுபதி தேர்ந்தெடுக்கப்பட்டதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்தநிலையில், விழா கமிட்டியினர், ஜூரி, அமைச்சர் ஆகியோரை நச்சரித்து சிறந்த நடிகர் விருதை விஜய் சேதுபதி வாங்கியதாக அவரை மறைமுகமாக விமர்சித்து தமிழ் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ட்விட்ரில் கருத்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை சர்வதேச திரைப்பட விழா நடக்கும் சத்யம் தியேட்டரில் ஒருவாரமாக குட்டிபோட்ட பூனை போல சுற்றி..
விழாக்கமிட்டி, ஜுரி, அமைச்சர் என அனைவரையும் நச்சரித்து சிறந்த நடிகர் விருதை வாங்கிவிட்டார் விருது வெறியர்.
‘இதெல்லாம் ஒரு பொழப்பா?’ என்று பலரும் புளிச்சென துப்பி வருகிறார்கள்.
தொந்தரவு செய்து, சிபாரிசு மூலம் அழுத்தம் தந்து சிறந்த நடிகர் விருது வாங்குவது மட்டமான செயல்.
அடுத்தாண்டு… விகடன் விருது தொடங்கி.. பல விழாக்குழுவினர் வரை நச்சரித்து கொல்லப்போகிறார்.
எல்லாரும் இவருக்கு ஒரு விருதை மறக்காம தந்துருங்க இல்லன்னா போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிடுங்க.
ஹலோ விகடன், கலாட்டா, பிகைண்ட் வுட்ஸ்.. அடுத்து நீங்க நடத்தப்போற 2022 சினிமா அவார்ட்ஸ்ல பெஸ்ட் ஆக்டர் அல்லது பெஸ்ட் டைரக்டர் அவார்டை எனக்கு எடுத்து வச்சிருங்க.
இல்லன்னா டெய்லி 10 போன் பண்ணுவேன். ஒத்துவரலன்னா சென்ட்ரல் மினிஸ்டர் மூலம் சிபாரிசுக்கு வருவேன். எப்படி வசதி?” என்று பதிவிட்டுள்ளார்.
இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை ட்விட்டரில் கடுமையாக விமர்த்து வருகின்றனர்.
செல்வம்
நவதாராளமயப் பொருளாதாரம்: ஒரு விளக்கப்படம்! – பகுதி 2
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!