மாரி செல்வராஜின் வாழை படத்தின் ப்ரீவியூ பார்த்த இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா ஆகியோர் நெகிழ்ந்து விட்டனர். இந்த படத்தை பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து, சில நிமிடங்கள் அவரின் கைகளை பற்றியபடி பேச முடியாத நிலையில் அமர்ந்திருந்தார். அதே போல, நடிகர் சூரியும் மாரிசெல்வராஜை கட்டி அணைத்து பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷ், வாழை படத்தை பற்றி தனது எக்ஸ் பக்கத்தில், சிரிக்கவும், கைத்தட்டவும், அழவும் தயாராகுங்கள். உங்களை கலங்கடிக்கச் செய்யும் உலகத்திற்குள் நுழையத் தயாராகுங்கள். உலகம் முழுவதும் உள்ள சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படும் அழகான படைப்பு வாழை. இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
வழக்கமாக பல படங்களை கழுவி ஊற்றும் ப்ளூ சட்டை மாறன் வாழை படத்துக்கு பாசிடிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். இந்த படத்தில் இளம் வயது நாயகனாக வரும் சிறுவனும் அவனது நண்பரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகராக ஹீரோவும் கமல் ரசிகராக அவரது நண்பரும் செய்யும் சேட்டைகள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன. இறுதிக் காட்சி கண்கலங்க வைத்து விடுகிறது. மாரி செல்வராஜ் தரமான படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். அதே வேளையில் படத்திலுள்ள ஒரே ஒரு குறையையும் ப்ளூ சட்டை மாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பள்ளியில் டீச்சரை கதையின் நாயகனாக சிறுவன் விரும்புவதாக காட்டப்படும் காட்சிகள் தான் உறுத்தும் விஷயமாக உள்ளது. அதையும் மோசமாக காட்டவில்லை என்பது ஆறுதலை தந்தாலும் அந்த காட்சிகளை இன்னும் கொஞ்சம் மாற்றியிருக்கலாம் என்றும் ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மேலும் சரிந்தது தங்கம் விலை…செம்ம வாய்ப்பு!
தவெக கொடி சர்ச்சை : விஜய் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்யக்கோரி புகார்!