பிக்பாஸ்: இந்த ஐஷு எங்களுக்கு வேண்டாம்… உருகும் அம்மா!

Published On:

| By Manjula

எங்களுக்கு இந்த ஐஷு வேண்டாம் என பிக்பாஸ் போட்டியாளர் ஐஷுவின் அம்மா ஷைஜி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பிரதீப் வெளியேற்றத்துக்கு பின் ரொம்ப உக்கிரமாக நாளுக்குநாள் மாறிக்கொண்டு வருகிறது. குறிப்பாக விசித்ரா, அர்ச்சனாவுக்கு எதிராக புல்லி கேங் எனப்படும் பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஷு ஆகியோர் தொடர்ந்து வம்பிழுத்து வருகின்றனர். நிகழ்ச்சியிலும் மீண்டும், மீண்டும் பிரதீப் வெளியேற்றம் குறித்த பேச்சுக்களே அடிபட்டு வருகின்றன. போட்டியாளர்கள் சொன்ன கமெண்ட்டுகளை பொதுவில் போட்டுடைத்து பிக்பாஸ் இந்த தீயில் மீண்டும் எண்ணெய் ஊற்றினார்.

அவர் எதிர்பார்த்தபடியே அது நன்கு வேலை செய்து நிக்சனின் பர்னிச்சரை மீண்டும் ஒருமுறை வினுஷா தேவி வழியாக உடைத்துப்போட்டு விட்டது.  எனவே இந்த வாரம் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

இதற்கு நடுவில் மீண்டும் தன் தாய்க்கழகமான விசித்ரா ஆர்மியில் ஐஷு இணைந்து விட்டார். என்றாலும் பிரதீப் வெளியேற்றம், நிக்சனுடன் சேர்ந்து சுற்றுவது போன்றவற்றால் அவரது இமேஜ் ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிக்கொண்டே செல்கிறது. இந்த வார எவிக்ஷன் லிஸ்டிலும் அவரது பெயர் உள்ளது.

இந்த நிலையில் ஐஷுவின் அம்மா ஷைஜி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர்,  ‘எல்லாவற்றையும் உணர்ந்து நீ நீயாகவே இரு ஐஷு. எங்களுக்கு இந்த ஐஷு வேண்டாம்.நாங்கள் எங்கள் ஐஷுவை பார்க்க விரும்புகிறோம்.  யார் உண்மையானவர்கள், யார் பொய்யானவர்கள் என்பதை நீ உணர்வாய் என நம்புகிறேன்’  என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

ஓபிஎஸ் அதிமுக வேஷ்டி கட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஜெயக்குமார்

சன்பீஸ்ட் மாம்ஸ்’ஸ் மேஜிக் பிஸ்கெட்டுகளுக்கு… சென்னை உயர்நீதிமன்றம் தடை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share