பிக்பாஸ் வீட்டை பொறுத்தவரை எது எப்படி இருந்தாலும் வாராவாரம் நாமினேஷன் சடங்கு மட்டும் தவறாமல் நடந்து விடும். இந்த விஷயத்தில் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதை தீபாவளி கொண்டாட்டத்தின் போது கூட பிக்பாஸ் நிரூபித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் சரவண விக்ரம், பூர்ணிமா, மணி சந்திரா, கூல் சுரேஷ், ஜோவிகா, விசித்ரா, விஜே அர்ச்சனா, தினேஷ் மற்றும் அனன்யா ராவ் என மொத்தம் 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
Nomination List :
Vikram, Poornima, Mani, CoolSuresh, Jovika, Vichitra, Ananya, Dinesh#Nixen – Vikram & VJArchana#Vikram – Mani & Vichitra#Poornima – Mani & Ananya#CoolSuresh – Maya & Vichitra#VijayVarma – Mani & Raveena#Dinesh – Vishnu & Vikram#Jovika – CoolSuresh &…— Akshay (@Filmophile_Man) November 27, 2023
வார இறுதியில் இதில் இருந்து ஒரு போட்டியாளரை (சமயங்களில் இரண்டு போட்டியாளராகவும் இருக்கலாம்) வாக்கெடுப்பின் அடிப்படையில் தேர்வு செய்து கமல் எலிமினேட் செய்வார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இந்த லிஸ்ட் பரவ, இதைப்பார்த்த ரசிகர்கள் வைல்டு கார்டு எண்ட்ரியா வந்த பொண்ணையும் நாமினேட் பண்ணி வச்சிருக்கீங்க.
வந்த ஒரே வாரத்துல மறுபடியும் அந்த பொண்ண வெளில அனுப்ப பாக்குறீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அனன்யா ராவ் இந்த சீசனில் முதல் போட்டியாளராக வீட்டைவிட்டு வெளியேறி இருந்தார். மீண்டும் நேற்றிரவு வீட்டுக்குள் வந்த அவரை பாசமாக சக போட்டியாளர்கள் இந்த பட்டியலில் சேர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டுமா?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க போறேன்… திடீரென திருந்திய நிக்சன்?
துருவ நட்சத்திரம் டிசம்பர் 08 ஆம் தேதி ரிலீஸ்?