கடந்த வாரம் பிரதீப் வெளியேறியதில் இருந்தே பிக்பாஸ் ஆட்டம் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து கொண்டே செல்கிறது. வீட்டில் அவர் இல்லா விட்டாலும் பெரும்பாலான போட்டியாளர்கள் பிரதீப் குறித்தே விவாதித்து கொண்டுள்ளனர்.
இதனால் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரதீப் எண்ட்ரி கொடுப்பாரா? என்பது பெரும்பான்மையான ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. மறுபுறம் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் விசித்ரா, ஆர்ஜே பிராவோ, அர்ச்சனா, பூர்ணிமா, ஐஷு மற்றும் தினேஷ் இருந்தனர்.
Bye Bye Aishu.. Happy Diwali#BiggBossTamil #BiggBoss7Tamil #HappyDiwali #Aishu pic.twitter.com/FXhDYSKlMJ
— BiggBoss Booster (@bb_booster) November 11, 2023
இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் தீவிரமாக இருந்தது. வீட்டுக்குள் ஆர்ஜே பிராவோ பெரிதாக எந்த விஷயமும் செய்யவில்லை. அதனால் அவர் வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
பூர்ணிமாவின் அடாவடி நடவடிக்கைகளால் அவர் தான் வெளியேறுவார் என மற்றொரு தரப்பினர் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல இந்த வாரம் ஐஷு வீட்டைவிட்டு வெளியேறி இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்து பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஐஷு தன்னுடைய கூடா நட்பினால் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியேறி இருக்கிறார். குறிப்பாக நிக்சனுடன் அவர் அதிக நேரம் செலவழித்ததே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பாடல் வெளியீட்டில் சிக்கல்!