பிக்பாஸ் வீட்டில் காதல் கிளிகளாக வலம் வந்த ஐஷு-நிக்சன் ஜோடியை பார்த்து மணி-ரவீனா, விஷ்ணு – பூர்ணிமா என அடுத்தடுத்த ஜோடிகள் உருவாக ஆரம்பித்தனர். இதில் ஐஷு வீட்டைவிட்டு வெளியேறிய பின் நிக்சன் சோக கீதம் வாசித்துக்கொண்டு திரிகிறார்.
விஷ்ணு-பூர்ணிமாவுக்கு இடையிலும் அவ்வப்போது முட்டிக்கொள்வதால் காதல் குறித்து எந்தவொரு முடிவுக்கும் அவர்கள் இன்னும் வரவில்லை. அதேபோல மற்றொரு ஜோடியான மணி-ரவீனாவுக்கு இடையே இருக்கு ஆனா இல்ல என்பது போல ஒரு டிராக் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் விஷ்ணு-பூர்ணிமா ஒன்று சேர வேண்டும் என மிகுந்த பிரயத்தனம் செய்யும் மாயா இருவருக்கும் இடையில் FLAMES போட்டு பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீட்டில் உள்ள போட்டியாளர்கள் பார்க்க மாயா இருவரின் பெயர்களை சிலேட்டில் எழுதி FLAMES போட்டு பார்க்கிறார்.
#Maya puts FLAMES for #VishnuVijay & #Poornima 😃
Wait for the twist!#BiggBoss7Tamil #BiggBossTamil7#BiggBossTamil #Vishnu pic.twitter.com/S5iSNlDW5v
— Akshay (@Filmophile_Man) November 23, 2023
ரிசல்ட் என்னவாக இருக்கும்? என விஷ்ணு, பூர்ணிமா இருவரும் நமட்டு சிரிப்புடன் பார்த்து கொண்டிருக்க, மாயா ஒவ்வொரு எழுத்தாக அடித்து பார்த்ததில் கடைசியாக L என வந்தது. அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்குறது லவ்வு தான என்பது போல விஷ்ணு இதை பார்க்க, பூர்ணிமா எதுவும் சொல்லாமல் சிரிக்கிறார்.
ஜோவிகா, நிக்சன், மாயா என பலருக்குமே இந்த ரிசல்ட் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பூர்ணிமா பெரிதாக எதுவும் ரியாக்ட் செய்யவில்லை என்றாலும் விஷ்ணு, மாயாவுக்கு கைகொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேரும் சட்டு, புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க என கிண்டலடித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா