நிக்சன் தன்னை உருவகேலி செய்ததற்கு மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான வினுஷா தேவி தெரிவித்துள்ளார். vinusha clarification about nixen comment
பிக்பாஸ் வீடு கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக விஜே அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் ஆகியோருக்கு எதிராக ‘புல்லி கேங்’ என குறிக்கப்படும் ஜோவிகா, மாயா, ஐஸ்வர்யா, பூர்ணிமா உள்ளிட்டோர் கைகோர்த்து அவர்களை பெரிதும் டார்ச்சர் செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நிக்சன் தன்னிடம் மன்னிப்பு எதுவும் கேட்கவில்லை என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் வினுஷா தேவி தெரிவித்து இருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் குறித்து சொன்ன கமெண்டுகள் ஒளிபரப்பாகின.
அதில் வினுஷா குறித்து நிக்சன் தெரிவித்த கமெண்ட் தான் இப்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அந்த கமெண்டில் நிக்சன், வினுஷாவை பாக்கவே புடிக்கல. வேலைக்காரி மாதிரி இருக்காரு. மண்டை சிறிதாக இருக்கிறது. கண்கள் அழகாக இருக்கிறது என்று பேசி இருக்கிறார். இது வினுஷா வீட்டுக்குள் இருந்து போதே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நிக்சனுக்கு எதிராக கமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால் நேற்று பிக்பாஸ் வீட்டில் நிக்சன் நான் அப்போதே வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன் என இந்த விவகாரத்தை மூடி மறைத்தார். இதைப்பார்த்த வினுஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார்.
அதில், ‘பிக்பாஸ் வீட்டுக்குள் நான் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதை நான் எல்லாருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் நல்ல ஒரு உறவிருந்தது. நான் அவரை ஒரு சகோதரராக கருதினேன். ஆனால் நாளாக நாளாக அவர் என்னை கிண்டல் செய்து பேச ஆரம்பித்தார்.
அவரது கிண்டல்கள் எல்லை மீறியதால் நான் அவரிடம் இப்படி செய்வதை நிறுத்துங்கள் என கூறினேன். பின்னர் அவர் அதற்கு மன்னிப்பு கேட்டார். நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் வீடியோ அனைத்தையும் பார்த்தபோது அதில் நிக்சன் என்னுடைய உடல் குறித்து கிண்டல் அடித்ததை தெரிந்து கொண்டேன். ஆனால் அவர் அதற்காக என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்று பிக்பாஸ் வீட்டில் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டதாக பொய் சொல்லி இருக்கிறார்.
இப்போது அவர் மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல ஒரு நபராக மாற்றாது. அந்த புள்ளி கும்பலோடு சேர்ந்து அவர் என்னை கிண்டல் செய்தது சந்தோஷமான விஷயம் இல்லை. கடந்த வாரத்தில் பெண்களுக்காக உரிமைக்குரல் கொடுத்த பெண்ணியவாதிகள் எங்கே? வீட்டில் எனக்கு ஆதரவு அளித்த விசித்ராவுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவரோடு எனக்காக குரல் கொடுத்த மேலும் சிலருக்கும் நன்றிகள்” என விளக்கம் அளித்திருக்கிறார்.
இதையடுத்து நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை வீட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். vinusha clarification about nixen comment
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ICC world cup 2023: நியூசிலாந்து – இலங்கை… மழை குறுக்கிட்டால் அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
90 நிமிடங்கள் பிணமாக நடித்துள்ள பிரபு தேவா