விஷ்ணு-பூர்ணிமா இடையில் நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை ஒரே நாளில் மொத்தமாக முடித்து விட்டு விட்டார் விஜய் வர்மா.
பிக்பாஸ் வீட்டில் நேற்று கோல்டு ஸ்டார்க்காக போட்டியாளர்கள் மோதிக்கொண்டனர். சும்மாவே ஒருவரை பற்றி புறணி பேசுபவர்களுக்கு நேரடியாக அப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் விட்டு விடுவார்களா என்ன?
ஒவ்வொரு போட்டியாளருக்கும் நகங்கள் மட்டும் தான் இல்லை. மற்றபடி மாற்றி, மாற்றி ஒருவரை ஒருவர் பிறாண்டி கொண்டு பயங்கரமாக சண்டை போட்டனர்.
இதன் ஆரம்பத்திலேயே டேமேஜ் கண்ட்ரோல் பண்ணுவோம் என மாயா, நிக்ஸன் பின்வாங்கி விட்டனர்.
அப்பாவி போர்வையில் சுற்றிய ரவீனா வலுவான போட்டியாளர்கள் வரிசையில் இருக்கும் மாயா, ரவீனாவை வெளியேற்றியது ஆச்சரியம் தான். தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளராக வெளியேற ஏகப்பட்ட டேமேஜூடன் உடைந்து போய் விசித்ரா வெளியேறினார்.
#VijayVarma caused heavy damage to #Vishnu#BiggBossTamil7 #BiggBossTamil pic.twitter.com/CN4k8Sn4BX
— Akshay (@Filmophile_Man) December 8, 2023
சர்ப்ரைஸ் ஆக டைட்டில் வின்னர் என்று கிண்டலடிக்கப்பட்ட சரவண விக்ரம் 5 ஸ்டார்களை கைப்பற்றி அவரது ஆர்மிக்கு எக்கச்சக்கமாக நம்பிக்கை அளித்துள்ளார்.
டாஸ்க்கின் போது விஜய் வர்மா, விஷ்ணு இருவரும் பேசுகையில் வழக்கம் போல விஷ்ணு பொங்க பூர்ணிமா குறித்து அவர் சொன்னதை பொதுவில் போட்டு விஜய் உடைத்து விட்டார்.
இதுகுறித்து விஜய் பேசுகையில், ” வந்த ரெண்டாவது வாரத்திலேயே பூர்ணிமா பத்தி நீங்க என்ன சொன்னீங்க ப்ரோ. இவள எல்லாம் யாரு கட்டிப்பா? அடுத்த வீட்டுக்கு போய் எப்படி வாழப்போறா? அப்படின்னு நீங்க சொன்னீங்க.
இவ்வளவு பெரிய ரியாலிட்டி ஷோவுல ஒரு பொண்ண பத்தி நீங்க பேசி இருக்கீங்க அது உங்களுக்கு தப்பா தெரியல,” என்று கேட்டார்.
குறுக்கே புகுந்த விசித்ரா, ”ரவீனா, பூர்ணிமா, அர்ச்சனா என எல்லா பொண்ணுகள பத்தியும் தப்பா பேசியிருக்கீங்க?” என விஷ்ணுவை ரவுண்டு கட்டினர். விஜய், விஷ்ணு சொன்னதை சொல்லச்சொல்ல பூர்ணிமாவின் முகம் பேயறைந்த மாதிரி மாறியது.
அவர் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவரது முகமே அப்பட்டமாக தெரிவித்தது. இதனால் தானோ என்னவோ கடைசி 3 பேரில் ஒருவராக நின்ற பூர்ணிமா, விக்ரமுக்கு விட்டுக்கொடுத்து வெளியேறினார்.
எது எப்படியோ விஜய் வர்மாவின் இந்த ஓபன் டாக்கால் விஷ்ணு-பூர்ணிமா இடையே லேசுபாசாக ஓடிக்கொண்டு இருந்த விஷயம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதோடு விஷ்ணுவின் பெயரும் பயங்கரமாக அடிபட்டு விட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
நீட் கையெழுத்துகள் : உதயநிதி முக்கிய அறிவிப்பு!
பேட்டால் அடித்து விடுவேன் மிரட்டிய பஞ்சாப் வீரர்… 2 போட்டிகளில் விளையாடுவதற்கு ஐசிசி தடை!