biggbosstamil7 vichithra degrades vishnu

‘உங்க அம்மா, அப்பா வெட்கப்படணும்’ நேரடியாக மோதிக்கொண்ட விஷ்ணு-விசித்ரா!

சினிமா

உங்க அப்பாவும், அம்மாவும் உன்ன ஒழுங்கா வளர்க்கல என விஷ்ணுவிடம், விசித்ரா சண்டை போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக விஷ்ணு விஜய் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் கேப்டன் ஆனது முதலே போட்டியாளர்களிடம் சிக்கி படாதபாடுபட்டு வருகிறார்.

குறிப்பாக விசித்ரா, அர்ச்சனா, பூர்ணிமா என பெண் போட்டியாளர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் அவரை ஒரு வழி செய்து விடுகின்றனர்.

இந்த நிலையில் விஷ்ணு-விசித்ரா சண்டை போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் டாஸ்க் தொடர்பாக இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

அப்போது விசித்ரா, ”உங்கள எல்லாம் நல்லது சொல்லி வளக்கலயா டா” என கேட்கிறார். பதிலுக்கு விஷ்ணு, ”நீங்க வேணா வளர்த்து விடுங்க. உங்கள போல மாறி,மாறி பேசல” என பதில் அளிக்கிறார்.

அதோடு விசித்ரா விட்டிருக்கலாம். ஆனால் அவருக்குள் இருக்கும் கோபம் முணுக்கென எட்டிப்பார்க்க, ”உங்க அம்மா,அப்பா வெட்கப்படணும். உன்ன இந்த மாதிரி வளர்த்ததுக்கு” என்று வார்த்தைகளை விட்டு விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் குடும்பத்தைலாம் இழுத்து பேசுறது ரொம்ப தப்பு என விசித்ராவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்றாலும் கூட வரும் வாரங்களில் இந்த விவகாரம் நிச்சயம் விசித்ராவுக்கு பின்னடைவாக மாறக்கூடும்.

மறுபுறம் ஒருமாதிரி சமாளித்தாலும் கூட கேப்டனாக இருக்கும் விஷ்ணுவிற்குள் அவ்வப்போது எட்டி பார்க்கும் கோபம் அவரை சண்டைக்கோழியாக மாற்றி விடுகிறது. இதனால் அவர் என்ன செய்தாலும் அது கடைசியாக சண்டையில் தான் வந்து முடிகிறது.

இவ்வளவு கலவரங்களுக்கு மத்தியிலும் கடந்த வாரம் நிக்ஸன் கேப்டனாக இருந்தபோது அடிக்கடி வீட்டுக்குள் அடிக்கப்பட்ட ஆராய்ச்சி மணியை, விஷ்ணுவிற்கு எதிராக போட்டியாளர்கள் யாரும் பயன்படுத்தவில்லை என்பது தான் ஆச்சரியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

சட்ட ரீதியாக போராடும் பன்னீர்: அடுத்த பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி

வெள்ள பாதிப்பு – நீங்களும் உதவலாம் : வங்கி விவரங்கள் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *