பிக்பாஸ்: ஜோவிகாவிற்கு சீக்ரெட் மெசேஜ் அனுப்பிய வனிதா விஜயகுமார்?

சினிமா

பிக்பாஸ் தற்போது பாதி நாட்களை கடந்து விட்டது. லேட்டஸ்டாக மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக விஜய் வர்மா, வினுஷா தேவி, அனன்யா மூவரும் உள்ளே செல்லவிருக்கின்றனர்.

பழைய போட்டியாளர்கள் வைல்டு கார்டாக உள்ளே வருகிறார்கள் என பிக்பாஸ் அறிவித்ததில் இருந்து, போட்டியாளர்கள் அனைவரும் இணைந்த கைகளாக மாறி எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என ஆடிப்பாடி வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பிக்பாஸ் குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதில் ஜோவிகா டீஷர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில், ‘சிங்கிள்னா சிங்கம் தா’ என்ற வாசகம் பிரிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இதைப்பார்த்த போட்டியாளர்கள் தங்களுக்குள் அதுகுறித்து பேசிக்கொள்கின்றனர்.

ஆனால் அது வனிதா தன்னுடைய மகளுக்கு அனுப்பிய சீக்ரெட் மெசேஜ் என கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் ஜோவிகா அதிகம் சர்ச்சைகளில் சிக்குவதில்லை. எனவே இதேபோல போட்டியை தொடர்ந்து விளையாடும்படியும், மாயா குழுவிடம் இருந்து விலகி இருக்கும்படியும் வனிதா அட்வைஸ் செய்திருக்கிறார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, ஒரே வாசகத்தில் இரண்டு செய்திகளை ஜோவிகாவிற்கு புரியும்படி ரத்தின சுருக்கமாக வனிதா சொல்லி இருக்கிறார். இதனால் வெளியில் இருக்கும் நிலவரங்கள் குடும்பத்தினரிடம் இருந்து போட்டியாளர்களுக்கு மறைமுகமாக இதுபோல பல்வேறு வழிகளில் செல்கிறதா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

கங்குவா: 6 வேடங்கள், 38 மொழிகள், 300 கோடி பட்ஜெட்… முரட்டு சம்பவம் லோடிங்!

ஓட்டுக் கேட்ட ஆளுநர்… சிறுகட்சிகள் கையில் லகான்! க்ளைமேக்ஸை நோக்கி ராஜஸ்தான்

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *