BiggBoss: அந்த மூன்று பேரும் ரீ-எண்ட்ரி… அவங்க வேணாம்… அலறும் போட்டியாளர்கள்!

சினிமா

இந்த பிக்பாஸ் சீசன் தற்போது 50 நாட்களை கடந்து ஓரளவு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஏனெனில் வீட்டின் உள்ளே கண்டெண்ட்டை லாரி,லாரியாக வாரி வழங்கிய பிரதீப் ரெட் கார்டு சர்ச்சையால் வெளியேறி விட்டார். அவரை தொடர்ந்து ஐஷுவும் வெளியேற பிக்பாஸ்க்கு இருந்த கொஞ்ச நஞ்ச கண்டெண்டும் போய் விட்டது.

இதுதவிர வைல்டு கார்டு எண்ட்ரியாளர்களாக வீட்டுக்குள் வந்த கானா பாலா, அன்ன பாரதி, ஆர்ஜே பிராவோ ஆகியோர் பெரிதாக கண்டெண்ட் அளிக்கவில்லை. இதில் அன்னபாரதி, கானா பாலா வெளியேறி விட்டனர். அர்ச்சனா மட்டும் விசித்ராவுடன் இணைந்து ஏதோ கொஞ்சம் பரவாயில்லை என்பது போல அவ்வப்போது தவணை முறையில் கண்டெண்ட் வழங்கி வருகிறார்.

 

கேப்டனாகி விட்டாலும் கண்டெண்ட் கொடுக்க தினேஷ் இன்னும் முயற்சி தான் செய்து கொண்டு இருக்கிறார். இதனால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் கொடுக்கும் டாஸ்க்குகள் விழலுக்கு இறைத்த நீராக வீணாகி போகின்றன. இந்த நிலையில் இப்படியே போனா பைனலுக்கு மிக்ஸர் பார்ட்டிகளா வந்துருவாங்க என நினைத்து தற்போது புதிய திட்டம் ஒன்றை பிக்பாஸ் வகுத்துள்ளார்.

அதன்படி வீட்டைவிட்டு வெளியேறிய மூன்று போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ-எண்ட்ரி கொடுக்க இருக்கின்றனர். இதை பிக்பாஸ் முறைப்படி அறிவித்து, ‘நான் கொடுக்குற டாஸ்க்ல வின் பண்ணா உங்களுக்கு நல்லது. இல்லேன்னா அவங்க மூணு பேருக்கு பதிலா இங்க இருந்து மூணு பேரு வெளில போய்டணும்’ என போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து வீட்டுக்குள் ஒரே வெட்டு குத்தாக கிடக்கிறது. அவங்க உள்ள வந்தா நம்ம காலி. ஏன்னா நம்மள பத்தி அவங்களுக்கு முழுசா தெரிஞ்சிருக்கும். அதை தடுத்தே ஆகணும் என்று போட்டியாளர்கள் ஒன்று கூடி திட்டம் வகுத்து வருகின்றனர். இந்த நிலையில் உள்ளே வரும் 3 போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

 

அதன்படி முதல் வாரமே வீட்டைவிட்டு வெளியேறிய அனன்யா, கோபத்தால் வெளியேறிய விஜய் வர்மா, நிக்சன் கமெண்டால் மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த வினுஷா தேவி ஆகிய மூவரும் தான் வீட்டுக்குள் வர இருக்கின்றனர். பிரதீப், ஐஷு இருவரும் மீண்டும் உள்ளே வர வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அனன்யா வெளியேறிய போது அவருக்கு விளையாட வாய்ப்பே கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் பெரிதும் ஆதங்கப்பட்டனர்.

அதனால் மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எப்படி அவர் பயன்படுத்த போகிறார் என்பதை பார்க்கலாம். விஜய் வர்மா வலிமையான போட்டியாளர் என்பதால் பிரதீப்பின் இடத்தை நிரப்பி கண்டெண்ட் அதிகம் தருவார் என பிக்பாஸ் டீம் எதிர்பார்க்கிறது.

அதேபோல ஐஷு வெளியேறியதால் அமைதி காக்கும் நிக்ஸனை மீண்டும் பார்முக்கு கொண்டு வர, வினுஷா உள்ளே வருவதே சரி என நினைத்து அவரை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கிறது. அதனால் தான் கடுகடுவென குரலை வைத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் உசுப்பி விடுகிறார்.

இதனால் வரும் நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் பார்முக்கு வருமா? என்பதை நாம் வழக்கம் போல காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

உதயநிதி பிறந்தநாளில் வி.பி.சிங் சிலை திறப்பு விழா… தலைவர்களுக்கு அழைப்பு!

சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனை ஜாமீன்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *