39-ம் நாள் காலையில் இருந்தே விஜே அர்ச்சனா, விஷ்ணு உள்ளிட்டோர் எதிர் அணியினர் குறித்து தீவிரமாக டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் மாயாவை வறுத்தெடுக்க இடையிடையே பூர்ணிமா தலையும் உருண்டது. அவர்கள் அணிக்குள் பிளவு இருக்கிறது ஆனால் அதை வெளிப்படுத்தி கொள்ளவில்லை என்பது தான் விஷ்ணு, அர்ச்சனாவின் கண்டுபிடிப்பாக இருந்தது. biggbosstamil7 architrave bully gang
இதையடுத்து இன்னும் கண்டெண்ட் எதுவும் பெருசா இல்லையே என யோசித்த பிக்பாஸ் அந்த ’கோர்ட் டாஸ்க்க ஆரம்பிங்க’ என போட்டியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் முதல் வழக்கை மாயா, பூர்ணிமாவுக்கு எதிராக விஷ்ணு தொடுத்தார். பிரதீப் இருந்தபோது நிகழ்ந்த சம்பவத்தை விஷ்ணு தோண்டியெடுத்து வந்தார். அடல்ட் கண்டெண்ட் குறித்த இந்த வழக்கில் ரவீனா நீதிபதியாக இருந்தார். பூர்ணிமாவுக்கு எதிராக பிரதீப் சொன்ன அடல்ட் கண்டெண்ட் ஒன்றை மாயா பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் இந்த வழக்கின் சாரம். அதாவது பெண்களுக்கு ஆதரவாக காட்டி கொள்ளும் மாயா இந்த நிகழ்வை ஜஸ்ட் லைக் தட் கடந்து சென்றார் என்பது தான் விஷ்ணுவின் குற்றச்சாட்டு.
இந்த வழக்கில் மாயா, பூர்ணிமா இருவர் மீதும் தவறில்லை என நீதிபதி ரவீனா மொக்கையாக தீர்ப்பளிக்க, கடுப்பான பிக்பாஸ் ’இது பட்டிமன்றம் இல்லை ஒழுங்கா கேஸ் நடத்துங்க’ என எச்சரித்தார்.
ரவீனாவை தீர்ப்பு சொல்ல விடாமல் பூர்ணிமா தடுக்க ’அவரை வேலை செய்ய விடுங்க’ என பிக்பாஸ் இடையில் புகுந்து காப்பாற்ற, ஒருவழியாக வழக்கை புரிந்து கொண்ட ரவீனா விஷ்ணுவுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கி படாதபாடுபட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
இதுகுறித்து பூர்ணிமா, மாயா, ஐஷு விவாதம் நடத்த கடைசியில் பூர்ணிமா அழுகையில் இது முடிந்தது. இதையடுத்து பூர்ணிமா பிக்பாஸிடம் சென்று விசித்ராவுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதாவது உணவு குறித்து அதிகம் தெரியாத அர்ச்சனாவை ஷாப்பிங் டாஸ்க்குக்கு விசித்ரா அனுப்பியது ஏன்? இதுதான் பூர்ணிமா தொடுத்த வழக்கு.
இது விசித்ராவின் தனிப்பட்ட விரோதம் என பூர்ணிமா குற்றஞ்சாட்ட, ’நீங்க எல்லாருடனும் இதை கலந்து ஆலோசித்தீர்களா?’ என விசித்ரா எதிர் அம்பு தொடுத்தார். இந்த வழக்கின் நீதிபதி நிக்ஸன் என்பது தான் விசித்திரம். நாங்கள் ஓட்டு போட்டு தான் அர்ச்சனாவை தேர்வு செய்தோம் என்றார் விசித்ரா. இந்த நேரத்தில் கூல் சுரேஷ், தினேஷ் இருவரையும் அழைத்து நிக்ஸன் விசாரிக்க அவங்களுக்கு ஒரு மாறுதலா இருக்கணும்னு ஓட்டு போட்டேன் என்றார் கூல். இந்த இடத்தில் தினேஷ் சொன்னது தான் சரியான பாயின்ட். ”அர்ச்சனா வேலை எதுவும் செய்யவில்லை என்று தானே அவரை ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்? அவர் வேலை செய்ய வேண்டும் என்று தான் அனுப்பி வைத்தேன்” என்றார். வைல்டு கார்டு போட்டியாளரில் நீண்ட நாட்கள் கழித்து தினேஷ் நன்றாக பெர்பார்ம் செய்கிறார்.
கேப்டன் மாயா ஷாப்பிங் குறித்து எதுவும் பொதுவில் கலந்து ஆலோசிக்கவில்லை என சற்று பெரிய அணுகுண்டை எடுத்து வீசினார் விசித்ரா. தன்மீது வீசப்படும் அம்புகளை அவர் சரியாகவே ஹேண்டில் செய்தார். என்றாலும் ரிவெஞ்ச் எடுப்பதற்காக விசித்ரா, அர்ச்சனாவை அனுப்பி வைத்தார் என்பது தான் புல்லி கேங்கின் குற்றச்சாட்டு. ஆனால் ஏன் வம்பு என்று நினைத்தாரோ என்னவோ இந்த வழக்கில் விசித்ராவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்து பின்னர் புல்லி கேங்கிடம் மாட்டிக்கொண்டு முழித்தார் நிக்ஸன். biggbosstamil7 vichithra bully gang
வழக்கம்போல இல்லாமல் இந்த புல்லி கேங்கிடம் இருந்து சற்று விலகியே இருந்தார் ஐஷு. ஒருவேளை இவர்களுடன் இருப்பது தனக்கு வெளியில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்று நினைத்தாரோ என்னவோ?
இந்த வாரம் தான் ரொம்ப சூப்பர் என சிலாகித்த விஷ்ணு நீ சொன்ன தீர்ப்பு கரெக்ட் நண்பா என நிக்ஸனையும் பாராட்டி தள்ளினார். இது வேலைக்கு ஆகாது என நினைத்த பிக்பாஸ் பில்களை வைத்து ஒரு டாஸ்க்கை அளித்தார். இதில் மாயா, அர்ச்சனா இருவரும் கலந்து கொண்டனர். இருவரும் பிக்பாஸ் கேள்விகளுக்கு சொதப்ப யாராச்சும் ஒருத்தரு ஜெயிலுக்கு போங்க என வழியனுப்பி வைத்தார் பிக்பாஸ். கேப்டன் ஜெயிலுக்கு போகலாமா பிக்பாஸ் என ரொம்ப அக்கறையாக கேள்வி எழுப்பினார் மாயா? அதற்கு சட்டென ஆமாம் என்று சொல்லி எஸ்கேப் ஆனார் பிக்பாஸ். பெரிய வீட்டினர் மாறி,மாறி ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்ட இவனுங்க எப்பவுமே திருந்த மாட்டாங்க என கமெண்ட் அடித்தார் விசித்ரா. இந்த ஜெயில் டாஸ்கில் பெரும்பாலானவர்கள் விஷ்ணுவை நாமினேட் செய்தனர். ஜோவிகாவுக்கும், விஷ்ணுவுக்கும் மீண்டும் முட்டிக்கொண்டது. மாறிமாறி திட்டி கொண்டனர். ஒருமனதாக விஷ்ணு ஜெயிலுக்கு போவதாக மாயா அறிவித்தார்.
இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ஸ்மால் பாஸ் வீட்டினர் பில்லை ஒளிச்சு வைச்சு தான் இப்படி ஆகிடுச்சு என புல்லி கேங்கை கேள்வி கேட்டனர். குறிப்பாக கூல் சுரேஷ் ”உங்களுக்கு சமைச்சு போடவா நாங்க இங்க வந்திருக்கோம்?” என கொந்தளித்தார். மீண்டும் இரண்டு வீட்டினரும் முட்டி கொண்டனர். தினேஷ் கேட்ட கேள்விகளுக்கு நாங்க கமல் சார்கிட்ட இதை பத்தி விளக்கம் சொல்றோம் என பூர்ணிமா முடித்து வைத்தார். அப்போ நாங்க எல்லாம் கேட்கக்கூடாதா? என சரியாக தினேஷ் கேட்க அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகி பின்னர் ஒவ்வொரு வாரமும் கமல் சாரிடம் ஸாரி கேட்டு தானே ஓட்டிட்டு இருக்கோம். வர வர பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கவே பயமா இருக்கு என பகிரங்கமாக பூர்ணிமா, மாயா ஒப்பு கொண்டனர். கம்பெனி சீக்ரெட்ட வெளில இப்படி பட்டுன்னு சொன்னதால் இந்த வார இறுதியில் தீபாவளி ஸ்பெசலாக சிலபல குறும்படங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. biggbosstamil7 vichithra bully gang
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
ரஜினியின் மாஸ்… ஓகே சொன்ன சிம்பு: தேசிங்கு பெரியசாமி பிக் அப்டேட்!
சென்னையில் வீடு கட்டுவதற்கான அனுமதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!