மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன்… வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் யார்?

சினிமா

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு டபுள் எவிக்ஷன் நிகழ்ந்துள்ளது. இந்த 7-வது சீசனை டபுள் எவிக்ஷன் சீசன் என்றே குறிப்பிடலாம். அந்தளவுக்கு இந்த சீசனில் பிக்பாஸ் இரண்டிரண்டு போட்டியாளர்களாக தொடர்ந்து வெளியேற்றி வருகிறார்.

அந்த வகையில் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அக்ஷயா மற்றும் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே வந்த ஆர்ஜே பிராவோ வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரமே பிராவோ வெளியேறுவார் என ரசிகர்களே கணிக்கும் அளவுக்கு தான் வீட்டுக்குள் பிராவோவின் நடவடிக்கைகள் இருந்தன.

ஆனால் எதிர்பாராத விதமாக கானா பாலா வீட்டை விட்டு வெளியேறினார். என்றாலும் ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு வைல்டு கார்டு போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். அன்னபாரதி, கானா பாலா, ஆர்ஜே பிராவோ என மொத்தம் 3 வைல்டு கார்டு போட்டியாளர்கள் இதன் மூலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

வைல்டு கார்டில் உள்ளே வந்த தினேஷ், அர்ச்சனா இருவர் மட்டுமே வீட்டுக்குள் தொடர்ந்து தாக்குப்பிடித்து வருகின்றனர். வீட்டை விட்டு வெளியேறிய ஆர்ஜே பிராவோ, அக்ஷயாவுக்கு பதிலாக விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா தேவி மூவரும் உள்ளே செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வினுஷா தேவி மீண்டும் வீட்டுக்குள் செல்ல தயக்கம் காட்டுகிறாராம். எனவே அவருக்கு பதிலாக வேறு போட்டியாளர் உள்ளே செல்வாரா? இல்லை அவரையே சமாதானம் செய்து அனுப்பி வைத்து இருக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இரண்டாவது வைல்டு கார்டு என்ட்ரிகளாக யார் உள்ளே செல்கிறார்கள்? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

Exclusive: டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு  அபாயம் இருக்கிறதா? – மருத்துவர் ஜெயராமன் விளக்கம்!

முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீதான வழக்குகளை திரும்ப பெறுக: எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *